சீனாவின் மிகப்பெரிய மின்சாரவாகன நிறுவனமான பிவைடி இலங்கையில் இன்று தனது டென்சாவை அறிமுகப்படுத்துகின்றது.இதன் மூலம் தனது பிரீமியன் பிராண்டான டென்சாவை தென்னாசியாவில் காலடி பதிக்க செய்கின்றது.
டென்சா டி9 பி8 பி5 மூலம் பிவைடி ஆடம்பர ஓட்டுநர் அனுபவத்தை மறுவரையறை செய்யவுள்ளது.
முழுமையான மின்சார பல்நோக்கு வாகனமான NEV டென்சா D9 பிரீமியம் குடும்ப போக்குவரத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டீ8 மற்றும் டீ5 பிளக்-இன் ஹைப்ரிட் மாதிரிகள் சக்தி தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பின் சமநிலையை நாடும் செயல்திறன் சார்ந்த ஓட்டுநர்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் உணர்வுள்ள தீர்வுகளில் ஆர்வத்தை வெளிப்படுத்திவரும் உள்ளுர் பிரீமியம் பிரிவில் இன்றைய அறிமுகம் மாற்றத்தை ஏற்படுத்தும் என தொழில்துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
பிவைடி ஆசியா பசுபிக்(பொது மேலாளர் லியு சூலியாங் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்துவதே நிறுவனத்தின் நீண்டகால தொலைநோக்குப் பார்வை என்று கூறினார். அதே நேரத்தில் சந்தை வரம்பை ஆழப்படுத்த அதன் உள்ளூர் கூட்டாளர்களுடன் ஒத்துழைப்பைமேம்படுத்தவுள்ளதாக தெரிவித்தார்
குறிப்பாக வாடிக்கையாளர்களுடன் நேரடி மற்றும் நெருக்கமான உறவுகளை வளர்ப்பதில் அவர்களின் அர்ப்பணிப்பு நுகர்வோர் ஈடுபாட்டை கணிசமாக அதிகரித்துள்ளது.என அவர் குறிப்பிட்டார்

“ஆசியாவைப் பொறுத்தவரை இலங்கை எங்களுக்கு மிக முக்கியமான சந்தையாகும். இலங்கையில் ஜோன் ஹீல்ஸ் சிஜிஆட்டோஆட்டோவுடனான மூலோபாய கூட்டணி டென்சாவின் அதிநவீன புதிய ஆற்றல் வாகன தொழில்நுட்பத்தை அவர்களின் நிறுவப்பட்ட சந்தை இருப்புடன் ஒருங்கிணைக்கிறது” என்று சூலியாங் கூறினார்
