முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைக்காக பிரசன்னமாகியிருந்தவேளை கைதுசெய்யப்பட்டுள்ளார்
விசாரணைக்காக அவர் ஆஜராகியிருந்த வேளை விசாரணையொன்று தொடர்பில் அதிகாரிகள் அவரை கைதுசெய்தனர்.
சுற்றுலாத்துறை அமைச்சின் கீழ் காணப்பட்ட நான்கு நிறுவனங்களின் ஊழியர்களிற்கான மருத்துவ காப்புறுதி தொடர்பில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பிலேயே இவர் கைதுசெய்யப்படடுள்ளார்.
இந்த காப்புறுதி விவகாரங்களை கையாள்வதற்கு மைஇன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் என்ற நிறுவனம் நியமிக்கப்பட்டதாகவும் இதன் பின்னர் இந்த நிறுவனத்திற்கு இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபகம் பெருந்தொகை பணத்தை செலுத்துமாறு உத்தரவிடப்பட்டதாகவும் இதனால் அந்த நிறுவனத்திற்கு இலாபமும் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு நஷ்டமும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.