bbc
1990களின் ஆரம்பத்தில் முற்றுகைக்கு உள்ளாகியிருந்த சரஜேவோ நகர மக்களை சுட்டுக்கொல்லும் சுற்றுலாவிற்காக பொஸ்னியா ஹெர்சகோவினாவிற்கு இத்தாலிய சுற்றுலாப்பயணிகள் சென்றனர் என வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இத்தாலி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பொஸ்னியா யுத்தத்தின் போது சினைப்பர் சவாரி எனப்படும் முற்றுகைக்கு உள்ளாகியுள்ள மக்களை சுட்டுக்கொல்லும் சுற்றுலாப்பயணத்திற்காக இத்தாலிய சேர்ந்த பலர் சென்றனர் என்ற தகவல் வெளியாகி உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சரஜேவோ நகரத்தில் முற்றுகைக்குள்ளாகியிருந்த மக்களை சினைப்பர் தாக்குதல் மூலம் சுட்டுக்கொல்வதற்காக இத்தாலிய சுற்றுலாப்பயணிகள் பெருமளவு பணத்தை செலுத்தினார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பத்திரிகையாளரும் எழுத்தாளருமான எசியோ கவசேனி இந்த தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார்.
ஆயுதங்கள் மீது மோகம் கொண்ட பெரும் செல்வந்தர்கள் மனித வேட்டையில் ஈடுபட்டனர்இஎன தெரிவித்துள்ள எசியோ கவசேனி சரஜேவோவை சுற்றியிருந்த சேர்பிய
இராணுவத்தின் நிலைகளில் இருந்து இருந்து முற்றுகைக்குள்ளாகியிருந்த அப்பாவி பொதுமக்களை கொல்லும் சுற்றுலாவிற்காக அவர்கள் அங்கு சென்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
ஆண்கள் பெண்கள் சிறுவர்கள்; குழந்தைகளை கொலை செய்வதற்கு வெவ்வேறு அளவு கட்டணங்கள் அறவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சரஜேவோ நான்கு வருடகாலம் முற்றுகையிடப்பட்டிருந்த 1100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.
யூகோஸ்லாவியா போரினால் துண்டாடப்பட்டது நகரம் செர்பியப் படைகளால் சூழப்பட்டு தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கி சுடும் தாக்குதல்களுக்கு உள்ளானது

வெளிநாடுகளில் இருந்து “மனித வேட்டைக்காரர்கள்” பற்றிய இதேபோன்ற குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக பல முறை முன்வைக்கப்பட்டுள்ளன ஆனால் போஸ்னிய இராணுவ உளவுத்துறை அதிகாரியின் சாட்சியத்தை உள்ளடக்கிய கவாஸ்ஸேனி சேகரித்த ஆதாரங்கள் இப்போது இத்தாலிய பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞர் அலெஸாண்ட்ரோ கோபிஸால் ஆராயப்படுகின்றன.
பொஸ்னிய அதிகாரியொருவர் தனது சகாக்கள் இவ்வகை சுற்றுலாப்பயணம் குறித்து 1993 இல் அறிந்துகொண்டதாகவும் 94 இல் இத்தாலியின் புலனாய்வு பிரிவிற்கு இதனை தெரியப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு சில மாதங்களின் பின்னர் இத்தாலியின் புலனாய்வு அமைப்பான சிஸ்மியிடமிருந்து பதில் வந்தது அவர்கள் வட இத்தாலியின் டிரிஸ்டேவிற்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள் பின்னர் சரஜேவோவிற்கு செல்கின்றனர் என தெரிவித்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதம் மற்றும் மாஃபியா பற்றி வழக்கமாக எழுதும் எசியோ கவாஸ்ஸெனி மூன்று தசாப்தங்களுக்கு முன்பு இத்தாலிய செய்தித்தாள் கோரியர் டெல்லா செரா இந்த ஈவிரக்கமற்ற நடவடிக்கை குறித்து செய்தி வெளியிட்டபோதுசரஜெவோவிற்கு துப்பாக்கி சுடும் சுற்றுப்பயணங்களைப் பற்றி முதலில் படித்தார். ஆனால் உறுதியான ஆதாரங்கள் இல்லாமல்.
ஸ்லோவேனிய இயக்குனர் மிரான் ஜுபானிக் எழுதிய 2022 ஆம் ஆண்டு வெளியான “சரஜெவோ சஃபாரி” என்ற ஆவணப்படத்தைப் பார்த்த பிறகு அவர் மீண்டும் இதில் ஆர்வம் காட்டத்தொடங்கினார். இது கொலைகளில் ஈடுபட்டவர்கள் அமெரிக்காஇ ரஷ்யா மற்றும் இத்தாலி உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று குற்றம் சாட்டுகிறது.
.