இலங்கை கட்டுமானத்துறையின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான பங்களிப்பு குறைவடைந்துள்ளதாக இலங்கை கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.
மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 9 வீத பங்களிப்பை செய்த கட்டுமானதுறையின் பங்களிப்பு 6 முதல் 3.5 ஆக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் தங்களின் கட்டுமான வாய்ப்புகளை இழந்துவிட்டனர்,கட்டுமான தொழிலில் ஈடுபடும் அனேகமானவர்கள் தேசிய கைத்தொழில் அதிகாரசபையில் தங்களை பதிவு செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வருட வரவுசெலவுதிட்டம் நிச்சயமாக கட்டுமானதொழில்துறைக்கு பாதகமான ஒன்று என தெரிவித்துள்ள அவர் ஒருகாலத்தில் வினைத்திறனுடன் சிறப்பாக செயற்பட்ட துறை தற்போது மிக மோசமாக செயல் இழந்துவிட்டது,கட்டுமான தொழில்துறைசார்ந்தவர்களுக்கோ சிறிய மற்றும் நடுத்தர தொழிலாளர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
