கொழும்பில் இடம்பெற்ற நான் கொய்ல் தலைமைத்துவ மன்றத்தில் அணிகளையும் வர்த்தகத்தையும் கட்டியெழுப்புதல் என்ற தலைப்பில் உரையாற்றி அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் ஜேசன் கிலெஸ்பி சிட்னியில் விளையாட்டை நேசிக்கும் குழந்தையாகயிருந்தது முதல் அவுஸ்திரேலிய தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்தது வரையிலான தனது அனுபவங்களை நினைவுகூர்ந்த அவர் பின்னடைவுகளும் தன்னம்பிக்கையும் எவ்வாறு தனது வாழ்க்கையை வடிவமைத்தன என்பதை பகிர்ந்துகொண்டுள்ளார்

எனது 21 வயதிற்குள் அவுஸ்திரேலிய அணிக்காக விளையாட வேண்டும் என்ற எனது கனவை நான் தெரிவித்தவேளை பலர் சிரித்தனர் எள்ளிநகையாடினர் என தெரிவித்த அவர் அந்த தருணத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்
அவர்கள் பார்த்ததெல்லாம் மெல்லிய மிதவேகத்தில் பந்து வீசும் ஒரு பதின்மவயது இளைஞனையே நான் இந்த தருணத்தை ஒளிரும் தருணம் என எப்போதும் குறிப்பிடுவேன் நான் மாறவேண்டும் என உணர்ந்ததால் அதனை அப்படி அழைக்கின்றேன் என குறிப்பிட்ட அவர் இந்த ஏளனம் எனது பார்வையை உத்தியை மாற்றியமைத்தது என தெரிவித்துள்ளார்.

எனது நம்பிக்கை எனது ஆதாரங்களில் இருந்து வந்ததுஇதிட்டமிடல் முன்தயாரிப்பு செயற்படுத்துதல் ஆகியவற்றிலிருந்து வந்தது என தெரிவித்துள்ள ஜேசன் கிலெஸ்பி விளையாட்டிலோ அல்லது வாழ்க்கையிலோ வெற்றிக்கான திறவுகோல் நம்பிக்கை தொடர்பாடல் அணியாக செயற்படல் மற்றும் உங்களிற்கான பங்களிப்பு எதுவென்பது குறித்த தெளிவு ஆகியவற்றில் உள்ளது என்பதை வலியுறுத்தினார்.
இந்த குணங்களை வளர்ப்பது உங்கள் குழுவிற்கும் உங்களிற்கும் வெற்றிக்கான சிறந்த வாய்ப்புகளை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
