முக்கிய அரசநிறுவனங்கள் ; 2025 ம் ஆண்டும் நட்டத்தில் இயங்குவது நிதியமைச்சின் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
52 முக்கிய அரசநிறுவனங்களில் 18 அரசநிறுவனங்கள் தொடர்ந்தும் நஷ்டத்திலேயே இயங்குவதாக நிதியமைச்சின் அறிக்கை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இந்த நிறுவனங்கள் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கும் வரிசெலுத்துவோருக்கும் சுமையாக விளங்குவது தெரியவந்துள்ளது.

அரசநிறுவனங்களின் ஒட்டுமொத்த இலாபம் பலமடங்கு குறைவடைந்துள்ளதாகவும்,இலங்கை மின்சார சபை ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் லங்கா சுகர் கொம்பனி போன்றவை தொடர்ந்தும் நஷ்டத்திலேயே இயங்குவதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனங்கள் மிகப்பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் நிறுவனங்களாக தொடர்ந்தும் காணப்படுகின்றன.
2024 இல் 52 நிறுவனங்களும் முதல்பாதியில் இலாபத்தை பதிவு செய்தன.இதற்கு நேர்மாறாக 2025ம் ஆண்டின் முதல் பாதியில் இதேகாலகட்டத்திற்கான எண்ணிக்கை 227.8 பில்லியனாக குறைவடைந்துள்ளது.
ஜூன் 30 திகதி வரை இலங்கை மின்சார சபையின் வரிக்கு முந்தைய இழப்பு 13.2 பில்லியனாக காணப்பட்டது,ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது, ஏப்ரல் முதல் ஜூன் 2025 வரை வரிக்கு முந்தைய இழப்பாக ரூ. 12 பில்லியன் இழப்பைச் சந்தித்துள்ளது. அதன் ஒட்டுமொத்த இழப்புகள் இப்போது ரூ. 628 பில்லியனாக உள்ளன, இதனால் விமான நிறுவனத்தின் பங்கு மதிப்பு எதிர்மறை ரூ. 415 பில்லியனாக உயர்ந்துள்ளது, மொத்த பொறுப்புகள் ரூ. 606.7 பில்லியனாக உள்ளன
