அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் மகிந்த சமரசிங்க தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களிற்கான அமெரிக்க பணிமணையின் போல் கபூரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது இருநாடுகளிற்கு இடையிலான வர்த்தகம் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஆராயப்பட்டதாக மகிந்தசமரசிங்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு விஜயம் மேற்கொண்டமைக்கு நன்றி இலங்கை தூதுவரே,இருநாடுகளினதும் மற்றும் இந்தோ -பசுபிக்கின் அமைதி மற்றும் செழிப்பிற்காக நாங்கள் வர்த்தக கடல்சார் பாதுகாப்ர் ஒத்துழைப்பு குறித்து ஆராய்ந்தோம் என அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
