உலகின் பிரபலமான தொழில்நுட்ப நிறுவனங்கள் இலத்தீன் அமெரிக்காவில்செயற்கை தொழில்நுட்ப தரவுநிலையங்களை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன இதன் காரணமாக சமூகங்கள் தண்ணீர் பற்றாக்குறை சூழல்மாசடைதல் போன்றவற்றை எதிர்கொள்ளும் ஆபத்தை உருவாக்குகின்றன.


தரவுநிலையங்களை இயக்குவதற்கு பெருமளவு நீர் தேவை,மெக்சிக்கோவில் இவ்வாறான பிரச்சினை எதிர்நோக்கப்பட்டதுடன் ,சில குடும்பங்கள் முற்றாக தண்ணீர் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டன. இதன் காரணமாக நோய் ஆபத்தும் உருவானது.


