இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அபிவிருத்தியை இலங்கை உன்னிப்பாக அவதானித்து வருவதுடன் அதனை பின்பற்றுவது குறித்து ஆராய்கின்றது என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மஹிஷினி கொலோன்தெரிவித்துள்ளார்.
குஜராத் முதலமைச்சர் பூபபேந்திரா பட்டேலை சந்தித்த பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராகயிருந்த காலம் முதல் இலங்கை குஜராத்தின் அபிவிருத்தியை உன்னிப்பாக அவதானித்து வருவதுடன் அதனை பின்பற்ற முயல்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
குஜராத்தும் இலங்கையும் கடல்சார் மாநிலங்களும் தேசங்களும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதியின் வாழ்த்துக்களை நான் குஜராத் முதலமைச்சருக்கு தெரிவித்தேன்,மக்களினதும் அரசாங்கத்தினதும் வாழ்த்துக்களையும் தெரிவித்தேன் என குறிப்பிட்டுள்ள அவர் பலவருடங்களாக இலங்கை மக்கள் குஜராத்தையும் அதன் வளர்ச்சியையும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர் என்பதை தெரிவித்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
அபிவிருத்தியை பொறுத்தவரை இலங்கை குஜராத்தினை ஒரு முன்மாதிரியாக பார்க்கின்றது பின்பற்ற முயல்கின்றது என அவர் தெரிவித்;துள்ளார்.
குஜராத் குறித்து பெரும் ஆர்வம் காணப்படுகின்றது,குஜராத் மிகப்பெரும் கடலோரத்தை கொண்டிருப்பதால் இலங்கை மக்களும் கடல்பயணம் மேற்கொள்பவர்கள் என்பதால் குஜராத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான புராதான உறவுகள் தொடர்புகள் குறித்தும் முதலமைச்சருக்கு நான் தெரிவித்தேன் என இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒரு கடல்சார் நாடு குஜராத்தும் கடல்சார் மாநிலம் இலங்கையும் குஜராத்தும் ஆழமான துறைமுக ங்களை கொண்டுள்ளன,என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டதை சுட்டிக்காட்டியுள்ள இந்திய தூதுவர் உலகிற்கான வாயிலாக இலங்கை துறைமுகங்களை இந்தியா பயன்படுத்தலாம் என அவர் தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.
