தேர்தலில் போட்டியிடாமலே 10 முறை முதலமைச்சர் பதவி.. பீகாரின் அடையாளம் நிதிஷ்குமார்..!!

பீகார் சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியே பெரும்பான்மை பெற்றுள்ளது. நிதிஷ்குமார் தான் மீண்டும் முதலமைச்சராவது உறுதியாகியுள்ளது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக இணைந்து அமைத்த தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

பீகார் என்றாலே நிதிஷ் குமார் , நிதிஷ் குமார் என்றாலே பீகார் என கூறும் அளவுக்கு தன்னுடைய பதவியை தக்க வைத்துள்ளதோடு மக்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்த தலைவராக திகழ்கிறார். நிதிஷ் குமார் ஏற்கனவே 9 முறை பீகார் மாநில முதலமைச்சராக இருந்துவிட்டார். தற்போது 10ஆவது முறையாக பதவி ஏற்க உள்ளார். ஆனால் இந்த 10 தேர்தல்களிலும் அவர் போட்டியிடவே இல்லை என்பது தான் சுவாரஸ்யம்.

நிதிஷ் குமார் பீகார் மாநில சட்ட மேலவை உறுப்பினராகவே இருந்து ஒன்பது முறை முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவர். நிதிஷ்குமார் இந்த முறையும் தேர்தலில் போட்டியிடவில்லை. பீகார் சட்ட மேலவை உறுப்பினராக இருப்பதால் நிதிஷ்குமார் 10ஆவது முறையாக தேர்தலில் போட்டியிடாமலேயே முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார் .

நிதிஷ் குமாரை பொறுத்தவரை 1977 ஆம் ஆண்டு முதன் முதலில் ஜனதா கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட்டார் . அந்த தேர்தலில் அவருக்கு தோல்வி தான் கிடைத்தது . அடுத்த தேர்தலிலும் தோல்வியை தழுவினார். 1985 ஆம் ஆண்டில் ஹர்ணாத் தொகுதியில் போட்டியிட்டு முதல் வெற்றி வாகையை சூடினார்.

ஐந்து முறை மக்களவை பதவி, 10 முறை முதலமைச்சர் பதவி , காங்கிரஸுடனும் ,பாஜகவுடனும் மாறி மாறி கூட்டணி என பீகார் தன் கைவிட்டு போகாமல் இருப்பதை உறுதி செய்தவர். முதன்முறையாக நிதிஷ்குமார் 2000 ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார். அந்த பதவி காலம் 7 நாட்களே நீடித்தது. பின்னர் 2005 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை 9 முறை முதலமைச்சர் பதவியை அலங்கரித்துள்ளார்.

இத்தனை ஆண்டு காலம் பீகார் மாநில முதலமைச்சராக தன்னுடைய அரியணையை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் தக்க வைத்து இருக்கிறார் என்பதே இவரது சாமர்த்தியம். இத்தனை ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த போதும் இவரின் சொத்து மதிப்பு வெறும் 1.64 கோடி ரூபாய் தான் என்றால் நம்ப முடிகிறதா .

2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி பீகார் மாநில அரசு வெளியிட்ட தகவலின்படி நிதிஷ்குமாரின் அசையும் சொத்துக்களின் மதிப்பு 16.97 இலட்சம் ரூபாய். இதில் ரொக்கமாக இருக்கும் 21,000 ரூபாய் பணத்தை கையில் வைத்திருக்கிறார். வங்கியில் டெபாசிட்டாக 60 ,811 ரூபாயை போட்டு வைத்திருக்கிறார் . இது தவிர நிலையான வைப்பு தொகை மற்றும் முதலீடுகள் என 16.97 இலட்சம் ரூபாய் வைத்திருக்கிறா.ர் அசையா சொத்துக்களாக 1.48 கோடி ரூபாய்க்கு சொத்து மதிப்பு வைத்திருக்கிறார் .இதில் குடியிருப்புகள் மற்றும் நிலங்கள் அடங்கும்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு