இலங்கைக்கானபிரிட்டிஸ் தூதுவர் அன்றூ பட்ரிக் ஜேவிபியின் பொதுச்செயலாளரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்
ஜேவிபியின் தலைமையகத்தில் இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் இருநாடுகளிற்கும் இடையிலான உறவுகள் குறித்து இருவரும் ஆராய்ந்துள்ளனர்.
இலங்கைக்கான பிரிட்டனின் ஆதரவை உயர்ஸ்தானிகர் மீண்டும் வெளியிட்டுள்ளார்
டில்வின் சில்வா பிரிட்டனிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
