ஆகாயத் தாமரையை உரமாக மாற்றும் திட்டத்தை ஜெனிவா மாநாட்டில் சமர்ப்பித்த தமிழக மாணவி சன்னிதா

‘மாற்றத்தை உருவாக்குபவர்கள் 2025’ என்ற தலைப்பில் உலக கோப்பைக்கான போட்டிகள் 9 கட்டங்களாக நடத்தப்பட்டன. இந்தப் போட்டியில் பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவிகள் சன்னிதா ஷலாகா ஆகியோர் நீர் மாசுபாட்டை குறைக்கும் நோக்கத்துடன் ‘ப்ராஜக்ட் ப்ளூ’ என்ற தலைப்பில் புதிய திட்டத்தை சமர்ப்பித்து விளக்கினர்.

இந்த திட்டப்படி தண்ணீரை மாசுபடுத்தும் மற்றும் நீர் வாழ் உயிரினங்களுக்கு ஆக்ஸிஜன் கிடைப்பதை தடுக்கும் நீர் ஆக்கிரமிப்பு கொடி தாவரமான ஆகாயத் தாமரையை நீரில் இருந்து அகற்றி அதை தரமான இயற்கை பவுடர் உரமாக தயாரித்து தாவர வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் விதத்தை விளக்கி அறிக்கை சமர்ப்பித்தனர்.

இந்த திட்டம் ஒவ்வொரு கட்டப் போட்டியிலும் ஏற்கப்பட்டது. டாப் 200 பிரிவில் இடம் பெற்ற இந்த மாணவிகளின் திட்ட அறிக்கையை இறுதியாக இந்தியாவில் இருந்து ஐ.நா. சபையில் நேரடியாக சமர்ப்பிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் மாணவி ஷலாகாவுக்கு விசா கிடைக்க தாமதமான நிலையில் மாணவி சன்னிதா மட்டும் கடந்த வாரம் தனது தந்தையுடன் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகமான ஜெனிவாவில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பங்கேற்று இந்த திட்ட அறிக்கையை சமர்ப்பித்து விளக்கினார்.

.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
Jaishankar
இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவு, புதுடெல்லியின் பரந்த அண்டை நாட்டு ஈடுபாட்டின் ஒருங்கிணைந்த பகுதி-இந்திய வெளிவிவகார அமைச்சர்
rohingya village burning
மியான்மருக்கு எதிரான தீர்ப்பு இனப்படுகொலையை நிரூபிப்பதை சாத்தியமாக்கியுள்ளது
raj somadeva pro
எலும்புக்கூடுகளைத் 'தொற்றுநோய்' என மூடிமறைக்கும் அவலம்: செம்மணி புதைக்குழியும் தமிழர்களின் நீதிக்கான நீண்ட காத்திருப்பும்
gota courts
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல கோட்டாபய விடுத்த கோரிக்கை-- நீதிமன்றம்நிராகரிப்பு!
ESWATINI
இரகசிய ஒப்பந்தம் மூலம் ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி தற்கொலை: பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கையால் சர்ச்சை
dinesh sca
தினேஷ் ஷாப்டர் கொலை: நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும் எவரும் கைது செய்யப்படவில்லை
Gender-violence-parliament
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - நாடாளுமன்றத்தில் ஹரிணி சஜித் செம்மஞ்சள் நிற ஆடைகளில்