தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதியமைச்சர் ஒருவர் 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான அடுக்குமாடி குடியிருப்பொன்றில் வசிக்கின்றார் என எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளதுடன் பிரதியமைச்சருக்கு அந்த வீட்டை யார் வழங்கியது என கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதியமைச்சர் எப்படி இந்த ஆடம்பர வ அடுக்குமாடி குடியிருப்பை வாங்கினார்,இந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கான அவருககு வழங்கியது யார்?அல்லது அர்ஜூன் அலோசியஸ் போன்று செல்வந்தரான நண்பர் வழங்கினாரா ?என எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் உள்ள மற்றுமொருவர் கொமிசன் பெறுகின்றார்,மற்றுமொருவர் சட்டவிரோதமாக கொள்கலன்களை அனுமதிக்கின்றார்,அவரிடமிருந்து துறைமுக பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது,ஆனால் அதற்காக அவர் அப்பாவியாக மாட்டார்,மத்திய வங்கி பிணைமுறி மோசடி,சீனி இறக்குமதி மோசடி,தேங்காய் எண்ணெய் மோசடி போன்றவை குறித்து பேசுவதற்கு எதிர்கட்சிக்கு தகுதியில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
