தோல்வியில் கிடைக்கும் அனுபவம் வெற்றியைப் பெற பயனுள்ளதாக இருக்கும்: ஜோஹோ இணை நிறுவனர் கருத்து

சென்னை: தோல்​வி​யில் கிடைக்​கும் அனுபவம் வெற்றியைப் பெற பயனுள்​ள​தாக இருக்​கும். எனவே, தோல்​வியைக் கண்டு துவளக் கூடாது என்று ஜோஹோ நிறு​வனத்​தின் இணை நிறு​வனர் குமார் வேம்பு கூறி​னார். சார்​பில் ‘லான்ச் பேட் – 2025’ என்ற கருத்​தரங்​கம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில், இளைஞர்​கள் குடும்​பத்​தினருடன் ஒருங்​கிணைந்து குடும்​பத் தொழிலையே கவனிப்​பதா அல்​லது சுய​மாக தங்​களுக்​கென ஸ்டார்ட்​-அப் நிறு​வனங்​களை தொடங்​கு​வதா அல்​லது வேலைக்கு செல்​வதா என்​பது குறித்து விவா​திக்​கப்​பட்​டது. இந்​நிகழ்​வில் ஏராள​மான இளம் தொழில்​முனை​வோர் கலந்து கொண்​டனர்.

கருத்​தரங்​கில் பங்​கேற்ற கெவின்​கேர் நிறு​வனர் சி.கே.ரங்​க​நாதன் பேசும்​போது “இன்​றைய கால​கட்​டத்​தில் தொடங்​கப்​படும் ஸ்டார்ட்​அப் நிறு​வனங்​கள் 95 சதவீதம் தோல்​வியை சந்​திக்​கின்​றன. இது இயற்​கை. நமது பிள்​ளை​கள் தொழிலில் ஈடு​படும்​போது சந்​திக்​கும் ஆரம்​ப
கட்ட தோல்வி​களை பெற்​றோர்​கள் பெரிதுபடுத்​தி, அவர்​களது தன்​னம்​பிக்​கையை இழக்​கச் செய்​யக்​கூ​டாது.

தொழில் செய்​வதற்கு வழி இல்​லை​யென்​றால்வேலைக்​குச் செல்​லலாம். ஆனால், நாட்​டுக்கு கடமை​யாற்ற வேண்​டும் என்று கரு​தி​னால், நிச்​ச​யம் தொழில் தொடங்க வேண்​டும். அதன் மூலம் நிறைய பேருக்கு வேலை​ வாய்ப்பு வழங்க வேண்​டும். அதுவே தேச சேவை” என்​றார்.
ஜோஹோ நிறு​வனத்​தின் இணை நிறு​வனர் குமார் வேம்பு பேசும்​போது, “தொழில் தொடங்​கு​வது என்​பது திட்​ட​மிட்ட, பகுத்​தறிவு சார்ந்த முடிவல்ல.
அது காதலில் விழு​வதைப்​போல உணர்​வுப்​பூர்​வ​மான அழைப்​பு. குடும்​பத் தொழிலில் இணைந்​தால் அது வாரிசு அரசி​ய​லாகி விடும். தனி அடை​யாளம் கிடைக்​காது போன்ற எண்​ணங்​கள் எல்​லாம் தேவை​யில்​லாதவை. சலுகை பெற்ற குடும்​பத்​தில் பிறந்​தது உங்​கள் தவறு கிடை​யாது. இருக்​கும் வாய்ப்​பு​களை பயன்​படுத்​திக் கொள்​ளவேண்​டும்.

விடா​முயற்​சிக்​கும், பிடி​வாதத்​துக்​கும் இடையே ஒரு மெல்​லிய கோடு​தான் உள்​ளது. வெற்றி பெற்​றால் உலகம் அதை விடா​முயற்சி என்று பாராட்​டும். தோல்​வியடைந்​தால் பிடி​வாதம் என்று சொல்​லும். தொழிலை நீங்​கள் உங்​களுக்​காக நடத்​துகிறீர்​கள். எனவே உங்​கள் மீது உங்​களுக்கு நம்​பிக்கை இருக்​க வேண்​டும். ஒவ்​வொரு நாளும் தோல்வி​கள் இருக்​கும்.

தோல்​வி​யில் இருந்து கிடைக்​கும் அனுபவம் வெற்றியைப் பெற பயனுள்​ள​தாக இருக்​கும். பிடித்​த​மானதை செய்​யுங்​கள். நல்ல அனுபவங்​களைத் தேடி, வாழ்க்​கைப் பயணத்தை அமைத்​துக் கொள்​ளுங்​கள்” என்​றார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்