இங்கிலாந்து சமூக ஊடக பயனாளர்களை இலக்குவைத்து குடியேற்றவாசிகளிற்கு எதிரான தகவல்களை வெளியிட்டு வந்த இலங்கையை சேர்ந்த நபர் குறித்து இங்கிலாந்தின் டைம்ஸ் மற்றும் சண்டே டைம்ஸ் செய்தித்தாள்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இலங்கையை சேர்ந்த கீத்சூரியபுர என்ற நபர் குடியேற்றவாசிகளிற்கு எதிரான முஸ்லீம் எதிரான – அரசியல் ரீதியில் தவறாக வழிநடத்தும் செய்திகள் தகவல்களை பரப்பும் 100க்கும் மேற்பட்ட முகநூல்களை இயக்கிவந்தார் என தெரிவித்துள்ள பிரித்தானிய செய்தித்தாள்கள் இங்கிலாந்தின் சமூக ஊடக பயனார்களை இலக்குவைத்து அவர் இந்த திட்டமிட்ட நடவடிக்கையை முன்னெடுத்தார் என குறிப்பிட்டுள்ளன.
இந்த முகநூல் பக்கங்களை மில்லியன் கணக்காளர்கள் பின்தொடர்ந்தனர், பார்வையிட்டனர்,இந்த நபர் தனது டிஜி;ட்டல் நடவடிக்கைகள் மூலம் 300,000 அமெரிக்க டொலர்களை உழைத்தார் என அந்த செய்தித்தாள்கள் தெரிவித்துள்ளன.
டைம்ஸின் புலனாய்வு ஊடகவியல் பணிமனை என்ற அமைப்பு மக்கள் அதிக ஈடுபாட்டை காண்பிக்ககூடிய பதிவுகளை செயற்கை நுண்ணறிவின் துணையுடன் இந்த நபர் வெளியிட்டார் என தெரிவித்துள்ளது.
இலங்கையை சேர்ந்த இந்த நபர் லண்டனில் உள்ள வீடமைப்பு பேரவை முஸ்லீம்களிற்கு மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது,அரசியல் கட்சிகளை மதகுழுக்கள் கட்டுப்படுத்துகின்றன,போன்ற புனையப்பட்ட கதைகளை உருவாக்கினார் .இவை பிரிட்டனின் சமூக பக்க ங்களில் வெளிவருவதற்கான விதத்தில் உருவாக்கப்பட்டன விளம்பரப்படுத்தப்பட்டன என பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
