30க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகையை இரத்து செய்யவேண்டிய நிலையேற்பட்டது – கொழும்பு விமானநிலையத்தின் பயணிகள் முனையத்தை விஸ்தரிப்பதில் ஏற்பட்ட தாமதமே காரணம் – நாடாளுமன்றத்தில் பிரதியமைச்சர்

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் பயணிகள் முனையத்தை விஸ்தரிப்பதில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக ஒருவார காலத்திற்குள் 30 க்கும் மேற்பட்ட குளிர்கால வெளிநாட்டு விமானங்களின் வருகையை இரத்து செய்யவேண்டிய நிலையேற்பட்டது என சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அந்த விமானங்கள் இலங்கைக்கு வந்திருந்தால் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை மூன்று மில்லியனை கடந்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றுடன் இந்த வருடத்தில் இலங்கைக்கு இரண்டு மில்லியன் சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாதத்திற்குள் இந்த எண்ணிக்கை 280இ000 ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் மூன்று மில்லியன் சுற்றுலாப்பயணிகள் என்ற இலக்கை அடையமுடியாமல்போனமைக்கு சுற்றுலாத்துறை தொடர்பான பிரச்சாரத்தின் பலவீனங்களோ வேறு காரணங்களோ இல்லை விமானநிலைய வசதிகளை விஸ்தரிக்க முடியாமல்போனமையே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்குள் வான் வெளி மூலமாகவும் துறைமுகம் மூலமாகவும் மாத்திரம் வரலாம் முன்னைய அரசாங்கம் கொழும்பு விமானநிலையத்தின் பயணிகள் முனையத்தை விஸ்தரிக்க தவறிவிட்டது என பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்
colombo port city
மத்திய கிழக்கு நாடுகளில்- கொழும்பு துறைமுகநகர முதலீட்டு மாநாடுகள்
NDB1
திருடப்பட்ட 13.64 பில்லியன் ரூபாயையும் டிஜிட்டல் சொத்துக்களையும் கண்டறிய NDB வங்கி வெளிநாட்டு நிறுவனத்தை நியமித்துள்ளது
tourists175
ஜப்பான், ஆஸ்திரேலியா சந்தைகளின் வளர்ச்சியால் செப்டம்பர் மாத சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரிப்பு
fdi
இலங்கையின் முதலீட்டு சூழல் தொடர்ந்தும் சவால்களை எதிர்கொள்கின்றது – அமெரிக்கா
Online1 loan
இணையவழி கடன்வழங்கும் நிறுவனங்கள்- சிஐடி விசாரணைகள் ஆரம்பம்
plane121
விமானிகளுக்கு இடையே மோதல் - துபாயிலிருந்து இஸ்ரேல் சென்றுகொண்டிருந்த விமானம் அவசர அவசரமாக சவுதியில் தரையிறங்கியது
sajith 5
வறுமைத் தரவுகள் பொய்யானவை: அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர்
iran war 10
மத்திய கிழக்கு பதற்றம் இலங்கையை 6 பொருளாதார முனைகளில் அச்சுறுத்துகிறது: ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) எச்சரிக்கை
imf srilanka
2027 உடன் முடிவடையும் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டம் - அதன் பின்னர் என்ன நடைபெறும்- இலங்கைக்கான பிரதிநிதி கருத்து