AI Bubble: இனி எந்த நிறுவனமும் தப்பாது.. கூகுளுக்கும் இதே நிலைமை தான்.. CEO சுந்தர் பிச்சை எச்சரிக்கை

அதிகப்படியான யூகங்களால் ஒரு பொருளின் அல்லது நிறுவனத்தின் உண்மையான மதிப்பைவிடப் பங்கு மதிப்பு அதிகரிக்கும்போது அது ‘குமிழி’ எனப்படுகிறது. சுந்தர் பிச்சையின் இந்த வெளிப்படையான கருத்துகள், AI துறையில் முதலீடு செய்பவர்களுக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது

—

 

உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களது வேலை செலவுகளை குறைக்கவும், லாபத்தை வானுயர உயர்த்தவும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் கோடிக்கணக்கான டாலர்களை முதலீடு செய்து வருகின்றன.

இந்த கடுமையான போட்டி மற்றும் அசுர வேகமான வளர்ச்சியை கூர்ந்து கவனித்து வரும் கூகுளின் தலைமை நிறுவனமான ஆல்ஃபபெட்டின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை, தற்போது AI சந்தையில் ஒரு விதமான உண்மையில்லாத வேகம் (Irrationality) இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

சுந்தர் பிச்சையின் முயற்சியின் காரணமாக, கூகுளின் ‘ஜெமினி’ போன்ற AI தயாரிப்புகளில் முதலீடு செய்யப்பட்டதால், கடந்த 7 மாதங்களில் ஆல்ஃபபெட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு இரட்டிப்பானது. இருப்பினும், இந்த வேகமான வளர்ச்சியானது, செயற்கையான ஒரு AI Bubble என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்

ஒருவேளை, இந்த AI Bubble வெடித்தால் கூகுள் தாக்குப்பிடிக்குமா என்று சுந்தர் பிச்சையிடம் கேட்டபோது, அவர் எச்சரிக்கை கலந்த தொனியில் பதிலளித்தார். “நாங்கள் உட்பட எந்த நிறுவனமும் இந்தச் சூழ்நிலையில் இருந்து விதிவிலக்காக இருக்கப் போவதில்லை.” இதன் மூலம், சந்தை சரிந்தால் பெரிய நிறுவனங்கள் கூட கஷ்டப்படும் என்பதை அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

கடந்த காலத்தின் பாடம் : இந்த சூழ்நிலையை கடந்த 2000-ஆம் ஆண்டில் பல இணைய நிறுவனங்களின் மதிப்புகள் சரிந்தது குறித்து கூறிய அவர், இணையத்தின் ஆரம்ப காலத்தைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அப்போது முதலீடுகள் அதிகமாக இருந்தன. ஆனால், இணையம் உலகத்தை மாற்றியது என்பதை யாரும் கேள்வி கேட்க முடியாது” என்று கூறியுள்ளார்.

AI-யும் அப்படித்தான் இருக்கும் என்று நான் நம்புகிறேன். எனவே, இப்போது நடப்பது ஒருபுறம் சரியானதாகவும் மறுபுறம் சில சமயங்களில் உண்மைக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கிறது என்று அவர் ஒப்புக்கொண்டார்.

“இந்த AI Bubble பற்றிய கதைகளை எழுத பலரும் ஆவலாக உள்ளனர். உண்மை என்னவென்றால், AI தொழில்நுட்பத்தின் சில பகுதிகள் இப்போது ஒரு குமிழி போலத்தான் இருக்கின்றன” என்று அவர் வெளிப்படையாக கூறியிருந்தார்.

அதேபோல், ஜெஃப் பெசோஸ் (அமேசான் நிறுவனர்) கூறுகையில், வங்கிகள் தொடர்பான மிகவும் குமிழி மோசமானது, அதைத் தவிர்க்க வேண்டும். ஆனால், தொழில் வளர்ச்சி தொடர்பான குமிழிகள் அவ்வளவு மோசமானவை அல்ல. இவை சமுதாயத்திற்கு நன்மையைக் கூட செய்யும். ஏனெனில், குழப்பங்கள் விலகிய பின் யார் வெற்றியாளர்கள் என்று தெரிய வரும்போது, அந்தப் புதிய கண்டுபிடிப்புகளால் சமூகம் பெரிய அளவில் பலன் அடையும்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகப்படியான யூகங்களால் ஒரு பொருளின் அல்லது நிறுவனத்தின் உண்மையான மதிப்பைவிடப் பங்கு மதிப்பு அதிகரிக்கும்போது அது ‘குமிழி’ எனப்படுகிறது. சுந்தர் பிச்சையின் இந்த வெளிப்படையான கருத்துகள், AI துறையில் முதலீடு செய்பவர்களுக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்
75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்