கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் விளிம்பு நிலை மாணவர்களுக்கான கூடுதல் கல்வி ஆதரவை வழங்கும் நோக்கில் வடக்கு மாகாணம் புதிய செயற்திட்டம்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் விளிம்பு நிலை மாணவர்களுக்கான கூடுதல் கல்வி ஆதரவை வழங்கும் நோக்கில் வடக்கு மாகாணம் புதிய செயற்றிட்டத்தை முன்னெடுக்கிறது. இதனை முன்னிட்டு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ) கலந்துரையாடல் ஒன்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தொழில்நுட்ப உதவியுடன் அனலைதீவு மற்றும் எழுவைதீவு பிரதேசங்களில் ஏற்கனவே இணையவழி வகுப்புகள் ஆரம்பமாகியுள்ளன. இந்த முயற்சியை மாகாணம் முழுவதும் விரிவாக்க ஆளுநரின் அறிவுறுத்தலின்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண கல்விப் பணிமனையின் தரவுகளின்படிஇ மாகாணத்தின் 13 வலயங்களிலும் சுமார் 2500 மாணவர்கள் இந்த முறை ஓ.எல். பரீட்சையில் சித்தியடைவதற்கான போதிய தகைமையின்மையுடன் உள்ளனர்.
இன்றைய கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த ஆளுநர் கல்வி மட்டத்தை உயர்த்துவது மாகாணத்தின் முன்னுரிமை. ஸ்மார்ட் போர்ட் அல்லது ஸ்மார்ட் ரிவி வசதியுள்ள பாடசாலைகளை அடையாளம் கண்டு அவற்றில் இணையவழி வகுப்புகளை நடத்துங்கள். எனவேண்டுகோள் விடுத்தார்

விளிம்பு நிலையிலுள்ள மாணவர்களை இணையவழியில் வகுப்புக்கள் நடைபெறும் பாடசாலைகளில் கட்டாயம் பங்கேற்க செய்யுங்கள். ஆசிரியர் ஒருவர் பாடசாலையில் பொறுப்பாக பணிபுரிய வேண்டும். மாணவர்களின் வரவு உறுதிப்படுத்தப்பட வேண்டும். பெற்றோர்களுக்கும் வகுப்புகள் குறித்து தெரிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களுக்கான அலகு ரீதியான கற்பித்தல் மற்றும் பரீட்சைகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும் தேவைக்கேற்ப பிற பாடங்களையும் கற்பிக்க முடியும் என்றும் தெரிவித்தார். கொவிட் கால அனுபவம் இந்த முயற்சியை மேலும் சிறப்பாக செயல்படுத்த உதவும் எனவும் அவர் கூறினார்.


உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் பிற பாடங்களுக்கான தேவையைக் குறிப்பிட்டனர். கல்வி அமைச்சின் செயலாளர் செயற்றிட்டம் தொடர்பான தெளிவான வழிகாட்டுதல்களை அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டியதையும்இ இலக்கு மாணவர்களை வகுப்புகளுக்கு இணைப்பது அதிபர்களின் பொறுப்பு என்பதையும் சுட்டிக்காட்டினார்.
மாகாண கல்விப் பணிப்பாளர் பரீட்சைக்கு இரண்டரை மாதங்கள் உள்ள நிலையில் விளிம்பு நிலை மாணவர்களை சித்தியடையும் நிலைக்கு கொண்டுவர உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 

தயார் நிலையில் உள்ள பாடசாலைகள் மற்றும் மாணவர்களை  புதன்கிழமையிலிருந்து (19.11.2025) வகுப்புகளை ஆரம்பிக்கும் என கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது.

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்
75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்