டெல்கோ நிறுவனம் (இப்போது டாடா மோட்டார்ஸ்) கடந்த 1991-ம் ஆண்டு சியாரா எஸ்யுவி காரை அறிமுகம் செய்தது. இதுதான் உள்நாட்டில் தயாரான முதல் எஸ்யுவி கார். 1997-ல் இதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் புதிய சியாரா காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.
இது விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. பழைய சியாரா காரை நினைவுபடுத்தும் வகையிலும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆகிய 2 வகைகளிலும் கிடைக்கும். மின்சார காரும் கிடைக்கும். இதன் ஆரம்ப விலை ரூ.17 லட்சமாகவும் அதிகபட்ச விலை ரூ.22 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட வாய்ப்பு உள்ளது
இன்று இந்தியாவில் கார்களில் பானரோமிக் சன்ரூஃப் மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் டாடா நிறுவனம் தனது சியாரா காரிலும் சன்ரூஃபை அறிமுகப்படுத்துகிறது. இதுவரை வெளியான டீசரில் இருந்து நமக்கு இது பெரிய சன்ரூஃபாக பின்பக்க சீட் வரை இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது தெரிகிறது. இது காரை காற்றோற்றமாக வைக்க உதவுகிறது. இதனால் குளிர் காலத்தில் நல்ல குளிர்ந்த சூழ்நிலையை பயணிகள் காருக்குள்ளேயே பெற முடியம்.

அடாஸ் அம்சம் மிக முக்கியமான அம்சமான நவீன கார்களில் வருகிறது. இது பாதுகாப்பு அம்சங்களில் மிக முக்கியமான அம்சமாக நவீன காலங்களில் கருதப்படுவதால் இ்நத அம்சத்தையும் இந்த காரில் டாடா நிறுவனம் சேர்த்துள்ளது. அதன்படி டாடா சியாரா காரில் லெவல் 2 அடாஸ் அம்சம் இருக்கிறது. இதில் ஆட்டோமெட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங்ல, லேன் கீப் அசிஸ்ட், லேன் டிப்பார்ச்சர் வார்னிங், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், பின்பக்க கிராஸ் டிராஃபிக் அலர்ட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
அதே நேரம் டாடா ஹாரியர் மற்றம் கர்வ் காரில் இந்த அம்சங்கள் அப்படியே உள்ளது. அதே அம்சத்தை டாடா சியாரா காரிலும் அந்நிறுவனம் பொருத்துகிறது. இதனால் இந்த காரும் மற்ற டாடா கார்களை போல பாதுகாப்பான கார்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். சேஃப்டி ரேட்டிங் விஷயத்திலும் இந்த கார் சிறப்பான ஸ்டார்களை பெறும்.
360 டிகிரி கேமரா அம்சம் அதிக விலை கொண்ட கார்களில் தற்போது பொதுவான அம்சமாக மாறிவிட்டது. இது கூடுதலான பாதுகாப்பைவழங்குகிறது. இது டிரைவருக்கு பிளைன்ட் ஸ்பாட்டை கண்காணிக்க உதவியாக இருக்கும். முக்கியமாக குறுகலான பாக்கிங் பகுதியில் காரை நிறுத்த வசதியாக இருக்கும். இதனால் இது கார் டிரைவர்களுக்கு அதிக உதவியாக இருக்கும்.
3 ஸ்கிரீன் செட்டப் உடன் இந்த காரின் உட்புற வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு ஸ்கிரீன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்காகவும், மற்றொரு ஸ்கிரீன் நடுவில் டச் ஸ்கிரீன் உடன்டிஜிட்டல் இன்ஃபோடெயின்மென்டிற்காகவும், முன்பக்க பயணிக்கான எண்டர்டெயின்மென்ட் ஸ்கிரீனும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கீரினில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது. இந்த காரில் இன்பில்டு ஆப்களும் உள்ளன. இது போக பிரிமியமான சவுண்டிற்கான சிறப்பான சவுண்ட் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகளுக்கு சிறப்பான அனுபவம் கிடைக்கும்.
இது போக இந்த காரில் டுயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளது. இதுவும் டாடா சியாரா காரில் இருப்பது உறதியாகியுள்ளது. இதனால் டிரைவர் மற்றும் பயணிகளக்கான தனித்தனி டெம்பரேச்சர்களை செட் செய்து கொள்ள முடியும். இதனால் சொகுசான பயண அனுபவம் கிடைக்கும். முக்கியமாக கோடை காலங்களில் இது பயணிகளுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா சியாரா கார் மிகப்பரிய எதிர்பார்ப்பிற்கிடையில் களம் இறங்குகிறது. இந்த கார் ரெட்ரோ லுக்கில் மார்டனான உட்புற வடிவமைப்பை கொண்டதாக இருக்கிறது. இந்த காருக்கான அதிகாரப்பூர்வமான புக்கிங் தற்போது நடந்து வருவதாககூறப்படுகிறது.