நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது சட்டப்படிப்பில் மர்மங்கள் காணப்படுவதாக வெளியாகும் தகவல்களை நிராகரித்துள்ளார்
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பி அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இது குறித்து விசாரணைகள் இடம்பெற்ற போதிலும் விசாரணை முடிவுகள் இன்னமும் பகிரங்கப்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நுகேகொடவில் 21ம் திகதி இடம்பெறவுள்ள பேரணியின் போது இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளிற்கான பதிலை முழு நாடும் பார்க்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்
