இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் சிட்ரோன் நிறுவனம் மற்ற முன்னணி கார் நிறுவனங்களை விடக் குறைந்த எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்து வந்தாலும் 2025 அக்டோபரில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் சிட்ரோன் சி3 ஹேட்ச்பேக் கார் ஆகும். கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் விற்பனைப் பட்டியலில் 13வது இடத்தில் இருக்கும் சிட்ரோன் ஒட்டுமொத்த சந்தையில் 0.3வீதமாக பங்கைக் கொண்டுள்ளது.
அதாவது கடந்த மாதத்தில் கார் வாங்கியவர்களில் 300 பேரில் ஒருவர் மட்டுமே சிட்ரோன் காரை தேர்வு செய்துள்ளார். இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளில் சி3 என்கிற ஹேட்ச்பேக் கார் சி3 ஏர்கிராஸ் (C3 Aircross) என்கிற எஸ்யூவி கார் பசால்ட் ((Basalt) என்கிற கூபே-ஸ்டைல் எஸ்யூவி கார் சி5 ஏர்கிராஸ் மற்றும் எலெக்ட்ரிக் சி3 ஹேட்ச்பேக் ஆகியவை அடங்கும்.

2025 அக்டோபரில் சிட்ரோன் நிறுவனம் 1426 கார்களை விற்றுள்ளது. இது 2024 அக்டோபரில் விற்கப்பட்ட 717 சிட்ரோன் கார்களைக் காட்டிலும் சுமார் 99 வீதம்அதிகமாகும். அதேபோல் மாதாந்திர ஒப்பிடுகையிலும் குறிப்பிடத்தக்க 94வீத வளர்ச்சியை சிட்ரோன் கண்டுள்ளது. ஏனெனில் 2025 செப்டம்பரில் 734 சிட்ரோன் கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன.
சிட்ரோன் சி3 ஹேட்ச்பேக் அக்டோபர் மாதத்தில் 897 யூனிட்களுடன் சிறந்த விற்பனையைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 300 சி3 கார்கள் விற்பனையை விட இது சுமார் 199வீதம் வளர்ச்சியும் 2025 செப்டம்பரில் விற்பனை செய்யப்பட்ட 448 சி3 கார்கள் விற்பனையை விட 100வீதம் வளர்ச்சியும் ஆகும்.
சி3 ஏர்கிராஸ் 227 யூனிட்கள் விற்பனையாகி 2024 அக்டோபரை காட்டிலும் 120வீத வளர்ச்சியையும் 2025 செப்டம்பரில் விற்கப்பட்ட 59 யூனிட்களை விட 285 வீதமாதாந்திர வளர்ச்சியையும் பெற்றுள்ளது. கடந்த மாதத்தில் அதிகம் விற்பனையான 4.2- 4.4 மீட்டர் எஸ்யூவி கார்களில் முதல் 15 கார்களில் சி3 ஏர்கிராஸ் மற்றும் பசால்ட் இரண்டும் இடம்பெற்றுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு சில சிட்ரோன் கார்கள் வழக்கம்போல் குறைவாகவே விறபனையாகி இருந்தாலும் ஒட்டுமொத்தமாக சிட்ரோனின் கார்கள் விற்பனை அதிகரித்து இருப்பது சந்தையில் சிட்ரோனின் புதிய உத்திகள் பலனளிக்கத் தொடங்கியிருப்பதைக் காட்டுகிறது. ‘ கீழ் சமீபத்திய தயாரிப்பு மேம்பாடுகள் மற்றும் கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி உடனான கூட்டணி மூலம் கிடைத்த விளம்பரம் ஆகியவை இந்திய வாடிக்கையாளர்களை ஈர்க்க உதவியுள்ளன.

மேலும் பண்டிகைக் கால தேவை மற்றும் ஜிஎஸ்டி குறைப்பிற்குப் பிறகு சிட்ரோன் தனது வாகனங்களின் விலையை மறுசீரமைத்தது இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுகிறது.
