1947’ ஒரு ரூபாய் நாணயம் வைத்த இந்தியபிரதமர் மோடியின் கைக்கடிகாரம் வைரல்

புதுடெல்லி: பழைய (1947) ஒரு ரூபாய் நாண​யம் முகப்​பில் பொறிக்​கப்​பட்ட கைக்​கடி​காரத்தை பிரதமர் நரேந்​திர மோடி அணிந்​துள்ள வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாகி வருகிறது.

வெற்​றிகர​மான அரசி​யல்​வாதி என்​பதை தாண்டி அற்​புத​மான ஃபேஷன் உணர்​வுக்கு சொந்​தக்​காரர் பிரதமர் மோடி. இதற்கு ஒவ்​வொரு ஆண்டு சுதந்​திர தினத்​தின்​போதும் டெல்லி செங்​கோட்​டை​யில் கொடியேற்​றும்​போது பிரதமர் மோடி அணி​யும் தலைப்​பாகையே சாட்​சி.

அந்த வகை​யில் தற்​போது பிரதமர் மோடி தனது கைகளில் அணிந்​திருக்​கும் கடி​காரம் சமூக வலை​தளங்​களில் பேசுபொருளாகி​யுள்​ளது. அந்த கடி​காரத்​தின் முகப்​பில் மிக​வும் அரிய பழைமை​யான (1947) ஒரு ரூபாய் நாண​யம் பொறிக்கப்பட்டுள்​ளது. மேலும்இ அந்த நாண​யத்​தின் நடுவே இந்தியா​வின் சுதந்​திர பயணத்தை குறிக்​கும் மற்​றும் நாட்​டின் ‘மேக் இன் இந்​தி​யா’ திட்​டத்தை பிர​திபலிக்​கும் வகையி​லான புலியின் உரு​வம் இடம்​பெற்​றுள்​ளது.

சுமார் ரூ.55இ000 முதல் ரூ.60இ000 வரை விலை கொண்ட அந்த ரோமன் பாக் பிராண்ட் கைக்​ கடி​காரத்தை ஜெய்​பூரைச் சேர்ந்த நிறு​வனம் தயாரித்​துள்​ளது. இதுஇ 43 மி.மீ அளவுள்ள துருப்பிடிக்காத எஃகி​னால் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த ஒரு ரூபாய் நாண​யம் பிரிட்​டிஷ் ஆட்​சி​யின் கீழ் அச்சிடப்பட்ட கடைசி நாண​யம் என்​ப​தால் அது முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாக உள்​ளது. 1946 (இரண்​டாம் பாதி) மற்​றும் 1947-க்கு இடை​யில் மட்​டுமே இந்த ஒரு ரூபாய் நாண​யம் அச்​சிடப்​பட்​டது.

இது குறித்து வாட்ச் கம்​பெனி​யின் நிறு​வனர் கவுரவ் மேத்தா கூறுகை​யில் “சுதேசி உணர்வு எழுச்சி பெற்று வரும் இந்த நேரத்​தில் பிரதமர் மோடி எங்​கள் நிறு​வனத்​தின் கைக்​ கடி​காரத்தை அணிந்​துள்​ளது அளவில்லா மகிழ்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது” என்றார்​.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்
75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்
colombo port city
மத்திய கிழக்கு நாடுகளில்- கொழும்பு துறைமுகநகர முதலீட்டு மாநாடுகள்