முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு இடது பக்க முள்ளந்தண்டு பாதிப்புகள் உள்ளதாக நீதிமன்றத்தில் அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதற்கான உடல்நிலை இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ள போதிலும் பசில் ராஜபக்ச இலங்கைக்கு வருவதற்கான பயண ஏற்பாடுகளை செய்திருந்தார் ஆனால் அவர் அதனை பின்னர் இரத்துசெய்துவிட்டார் என அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பசில்ராஜபக்ச சமர்ப்பித்துள்ள மருத்துவ அறிக்கைகளில முரண்பாடுகள் உள்ளதாக தெரிவித்துள்ள பிரதிசொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிகமஹ பசில்ராஜபக்ச வேண்டுமென்றே நீதிமன்ற நடவடிக்கைகளை தவிர்க்கின்றார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் உள்ள பிரவுன் ஹில்ஸ் பகுதியில் ஒன்றரை ஏக்கர் நிலத்தை வாங்குவதற்காக சட்டவிரோதமாக பெறப்பட்ட 50 மில்லியன் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முதலாவது இரண்டாவது சந்தேநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜரான அதேவேளைமூன்றாவது சந்தேகநபரான பசில்ராஜபக்சவும் நான்காவது சந்தேகநபரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
பசில்ராஜபக்ச தனக்கு இடது பக்க முதுகுவலி உள்ளதாக தெரிவிக்கும் மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னைய மருத்துவ அறிக்கைகள் பசில்ராஜபக்சவிற்கு கழுத்தில் காயம் என தெரிவித்திருந்தன என குறிப்பிட்ட பிரதிசொலிசிட்டர் ஜெனரல் ஆனால் எக்ஸ்ரே அவ்வாறான காயங்கள் எதனையும் காண்பிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.