பில்​லியனர் பட்​டியலில் ‘குரோ’ சிஇஓ லலித்: ​விவ​சாய குடும்​பத்​தில் பிறந்தவர்

பெங்​களூரு: குரோ நிறு​வனம் ஐபிஓ வெளி​யான நிலை​யில் அதன் சிஇஓ பில்​லியனர் பட்​டியலில் இணைந்​துள்​ளார்.

மத்​திய பிரதேச மாநிலம் கார்​கோன் மாவட்​டம், லெபா என்ற சிறு கிராமத்​தைச் சேர்ந்த ஒரு விவ​சா​யிக்கு மகனாக பிறந்​தவர் லலித் கேஷர் (44). சிறு வயதிலேயே சுட்​டி​யாக விளங்​கிய தனது மகனுக்கு சிறந்த கல்​வியை வழங்க அவரது பெற்றோர் விரும்​பினர். ஆனால், அங்கு ஆங்​கிலப் பள்​ளி​களே இல்​லை.

இதையடுத்​து, கார்​கோன் நகரில் உள்ள தங்​கள் பெற்​றோர் வீட்​டில் லலித்தை தங்​க​வைத்து படிக்க வைத்​தனர். படிப்​பில் சிறந்து விளங்​கிய லலித், ஜேஇஇ தேர்​வில் வெற்றி பெற்று மும்பை ஐஐடி​யில் படித்​தார். முதுகலை படிப்​பை​யும் அங்​கேயே முடித்த அவர், 2011-ல் எஜுபிளிக்ஸ் ஸ்டார்ட்​-அப் நிறு​வனத்தை தொடங்​கி​னார். பின்​னர் 2013-ம் ஆண்டு பிளிப்​கார்ட் நிறு​வனத்​தில் தயாரிப்பு மேலா​ள​ராக வேலைக்கு சேர்ந்​தார்.

பின்​னர் லலித் கேஷர், ஹர்ஷ் ஜெயின், இஷான் பன்​சால் மற்​றும் நீரஜ் சிங் ஆகிய 4 பேரும் இணைந்​து, பெங்​களூருவை தலை​மையக​மாகக் கொண்டு பில்​லியன்​பிரெய்ன்ஸ் காரேஜ் வென்ச்​சர்ஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறு​வனத்தை தொடங்​கினர்.

இதன் மூலம், ‘குரோ’ என்ற பெயரில் ஒரு செயலியை அறி​முகம் செய்​தனர். இப்​போது சில்​லறை முதலீட்​டுக்​கான நாட்​டின் முன்​னணி டிஜிட்​டல் செயலி​யாக குரோ செயலி உரு​வெடுத்​துள்​ளது. இந்த சூழ்​நிலை​யில், பில்​லியன்​பிரெய்ன்ஸ் நிறு​வனம் சமீபத்​தில் புதிய பங்​கு​களை (ஐபிஓ) வெளி​யிட்​டது. இது கடந்த 12-ம் தேதி பங்​குச் சந்​தை​யில் பட்​டியலிடப்​பட்​டது. ஒரு பங்​கின் விலை ரூ.100 ஆக நிர்​ண​யிக்​கப்​பட்​டது. இதன் மூலம் இந்​நிறு​வனத்​தின் சொத்து மதிப்பு ரூ.1 லட்​சம் கோடியைத் தாண்​டியது.

இதில், இணை நிறு​வனரும் தலை​மைச் செயல் அதி​காரி​யு​மான லலித் கேஷர் 9.06% பங்​கு​களை (55.91 கோடி பங்​கு​கள்) வைத்​துள்​ளார். இதன்​மூலம் அவருடைய பங்​கு​களின் மதிப்பு 1 பில்​லியன் டாலரை (ரூ.9 ஆயிரம் கோடி) தாண்டி விட்​டது. இதன்​மூலம் பில்​லியனர் பட்​டியலில் லலித் இணைந்​துள்​ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு