அரசாங்கத்தின் கட்டுமான திட்டங்கள் நத்தைவேகத்தில்-37 திட்டங்கள் இடைநடுவில் கைவிடப்பட்டன

2025 இல்பூர்த்தி செய்வதென திட்டமிடப்பட்ட அரசாங்கத்தின் 79கட்டுமான திட்டங்களில் ஐந்து மாத்திரமே கட்டிமுடிக்கப்படும் நிலையில் உள்ளதாக
இலங்கை கட்டிட துறையினரின் சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட 21 திட்டங்கள், வெளிநாட்டு நிதிஉதவியுடன் முன்னெடுக்கப்பட்ட ஆறு திட்டங்கள்,உள்நாட்டு கடனின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பத்து திட்டங்கள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளன.
கட்டுமான தொழில்துறைக்காக 2025 வரவு செலவுதிட்டத்தில் 1315 மில்லியன் ஒதுக்கப்பட்ட போதிலும் தெளிவான நிதி எவ்வாறு வழங்கப்படும் என்பது குறித்து தெளிவான தகவல்கள் இடம்பெற்றிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.


79 கட்டுமான திட்டங்களிற்காக முதலில் 3.3 டிரில்லியனும் பின்னர் 1.3 டிரில்லியனும் ஒதுக்கப்பட்டதாக தெரிவித்துள்ள அவர் உள்நாட்டு கட்டுமான திட்டங்கள் 72 வீத முன்னேற்றத்தை காண்பித்துள்ளன,நிதியை பெற்றுக்கொள்வதில் காணப்படும் தாமதம் காரணமாக வெளிநாட்டு நிதி உதவியுடனான திட்டங்களில் 27 வீதமானவை உரிய முன்னேற்றத்தை காண்பிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
முன்னேற்றத்தை காண்பிக்க தவறிய அரசாங்கத்தின் 96 திட்டங்கள் சிவப்பு கோட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள அவர் 2025 பல கட்டுமான திட்டங்கள் முடங்கிய போதிலும் 2026 இல் புதிய கட்டுமான திட்டங்கள் குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்