சர்வதேச அளவில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளதால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை எதிர்கொள்ளவேண்டிய நிலையில் இலங்கை உள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன் காரணமாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உள்நாட்டு விலைகள் குறித்து தற்போது ஆராய்ந்துவருகின்றது.
குளிர்காலத்தில் எரிபொருள் தேவை அதிகரிப்பு ரஸ்யாவிற்கு எதிரான தடைகள் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள்விலை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரியொருவர் ரஸ்யாவின் எரிபொருட்களை கொண்டு செல்வதுடன் தொடர்புபட்ட 117 எரிபொருள் கப்பல்களிற்கு எதிரான தடை பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார்.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் சர்வதேச நிலவரம் குறித்த தனது மாதாந்த ஆய்வின் போது சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியம் உற்பத்திகளின் விலை அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டுள்ளது என தெரிவித்துள்ள அதிகாரியொருவர் நவம்பரின் முதல் மூன்று வாரங்களில் விலைகளில் அதிகரிப்பு காணப்பட்டது என தெரிவித்துள்ளார்.
