இலங்கையில் தற்போதுவேலைவாய்ப்பற்ற தனிநபர்களின் எண்ணிக்கை365,951ஆககாணப்படுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்
எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாசவின் கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொழிலார்கள் குறித்த ஆய்வொன்றின் மூலம் இலங்கையில் வேலைவாய்ப்பின்மை 2024 ஆரம்பத்தில் 4.5 ஆக காணப்பட்டது 2025 இல் 3.8 ஆக குறைவடைந்துள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
12000 பட்டதாரிகள் வேலைவாய்ப்பற்றவர்களாக உள்ளனர் என தெரிவித்துள்ள பிரதமர் அரசாங்கத்தின் கொள்கையின் படி வேலையற்றபட்டதாரிகளை அரசசேவைக்குள் உள்வாங்குவதற்கான நடவடிக்கை இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார்.
