வளர்ச்சிக்கான நுழைவாயில் ஆசியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் என்ற கருப்பொருளில் எதிர்வரும் இரண்டாம் மூன்றாம திகதிகளில் இலங்கை பொருளாதார முதலீட்டு உச்சிமாநாடு இடம்பெறவுள்ளது.

இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் உலகநாடுகளை சேர்ந்த 100க்கும் அதிகமான பிரதிநிதிகளுடன் சுமார் 800 பேர் கலந்துகொள்ளவுள்ளனர்.
அமெரிக்கா சுவீடன் சிங்கப்பூர் இந்தியா ஜேர்மனி உட்பட பல நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இலங்கை மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 40 க்கும் மேற்பட்டவர்கள் வர்த்தகம் முதலீடு உற்பத்தி உட்பட துறைசார் விடயங்களில் உரையாற்றவுள்ளனர்.

புதிதாக உருவாகிவரும் வாய்ப்புகள்,அபிவிருத்திகள் மற்றும் தனியார் துறையினர் எந்த விடயங்களில் அபிவிருத்தி பங்களிப்பு செய்யலாம் போன்ற நிகழ்ச்சிநிரலை அடிப்படையாக கொண்டதாக இந்த பொருளாதார மாநாடு அமையவுள்ளது.புதிய சீர்திருத்தங்கள் மற்றும் இலங்கையின் பொருளாதார மீட்சியின் திசையைப் புரிந்துகொள்ள நேரடி வழியை வழங்கும் வகையில் மூத்த கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்களிடமிருந்து நேரடியாகக் கேட்கும் வாய்ப்பையும் பங்கேற்பாளர்கள் பெறுவார்கள்.
