கோடி கோடியாய் பணம் வைத்திருந்தாலும் இந்த காரை வாங்க 4- 5 மாதம் வெயிட் பண்ணனும்! காரின் விலை அப்படி…!!

இந்தியாவின் இரண்டாவது, அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமான ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India), தனது முதன்மை எலெக்ட்ரிக் ரோட்ஸ்டர் காரான எம்ஜி சைபர்ஸ்டர் (MG Cyberster) மூலம் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகின் அதிவேக எம்ஜி கார் மற்றும் இந்தியாவின் அதிக விலையிலான எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் எனப் பெயர் பெற்றுள்ள சைபர்ஸ்டர், அறிமுகமான சில மாதங்களிலேயே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த ஆண்டு ஜூலையில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, எம்ஜி சைபர்ஸ்டர் எலெக்ட்ரிக் கார் அதிக வாடிக்கையாளர்களை பெற்று வருகிறது. சமீபத்தில் கூட இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஷபாலி வெர்மா (Shafali Verma) சைபர்ஸ்டர் காரை வாங்கி இருந்ததை பற்றி நமது செய்தித்தளத்தில் பார்த்து இருந்தோம். எம்ஜி நிறுவனத்தின் பிரத்யேக ‘எம்ஜி செலக்ட்’ சொகுசு சில்லறை விற்பனை ஷோரூம்கள் மூலம் இதுவரையில் 350-க்கும் மேற்பட்ட சைபர்ஸ்டர் கார்கள் விற்பனையாகியுள்ளன.

இதனை பெருமிதத்துடன் தெரிவித்துள்ள ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி நிறுவனம், இந்த எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கும் புதிய வாடிக்கையாளர்கள் 4 முதல் 5 மாதங்கள் வரையில் காத்திருக்க வேண்டிய அளவிற்கு அசாதாரண தேவை ஏற்பட்டுள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. விளையாட்டு வீரர்கள் முதல் திரைப்பட நட்சத்திரங்கள் வரை பல தரப்பு மக்களையும் சைபர்ஸ்டர் கவர்ந்துள்ளது.

பிரபலமான எம்ஜிபி ரோட்ஸ்டர் (MGB Roadster) காரின் பாரம்பரியத்தில் உருவான எம்ஜி சைபர்ஸ்டர், எதிர்கால வடிவமைப்புடன் ஆற்றல் மற்றும் செயல்திறனை ஒருங்கிணைக்கிறது. திறந்தவெளி அனுபவத்தை விரும்பும் ஸ்போர்ட்ஸ் கார் ஆர்வலர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட இந்த காரின் தனித்துவமான வடிவம், கத்தரிக்கோல் வடிவ கதவுகள் மற்றும் மென்மையாக திறந்து மூடும் மேற்கூரை, கிளாசிக் அழகியலுடன் நவீனத்துவத்தை இணைக்கிறது.


சைபர்ஸ்டரின் இரட்டை மோட்டார் ஆல்-வீல் டிரைவ் அமைப்பு அதிகப்பட்சமாக 510 பிஎஸ் ஆற்றலையும், 725 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது. இதன் மூலமாக இந்த கார் வெறும் 3.2 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ/மணி வேகத்தை எட்டுகிறது. மேலும், கூர்மையான டிசைனிலான DRL-கள், ஆக்டிவ் ஏரோ பாகங்களுடன் கூடிய கம்பேக் (Kammback) பின்புற வடிவமைப்பு மற்றும் 4-பிஸ்டன் பிரெம்போ முன் பிரேக் காலிப்பர்கள் ஆகியவை சைபர்ஸ்டர் காரின் தனித்துவமான வடிவமைப்பு அம்சங்களாகும்.

இந்த பிரேக்குகள் 100 கிமீ/மணி வேகத்தில் இருந்து வெறும் 33 மீட்டரில் காரை முழுமையாக நிறுத்த உதவுகின்றன. இதற்கேற்ப, பைரெல்லி P-ஜீரோ டயர்களுடன் கூடிய 20 அங்குல அலாய் சக்கரங்கள் சிறந்த பிடிமானத்தையும் செயல்திறனையும் உறுதி செய்கின்றன. எம்ஜி சைபர்ஸ்டர் ரூ.74.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

சைபர்ஸ்டர் மற்றும் எம்ஜி எம்9 பிரசிடென்ஷியல் லிமோசின் (M9 Presidential Limousine) ஆகிய கார்களின் ஒருங்கிணைந்த வெற்றியால், ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் இந்தியாவின் சொகுசு எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் இரண்டாவது பெரிய நிறுவனமாக உயர்ந்துள்ளது. இந்த இரண்டு எம்ஜி எலெக்ட்ரிக் கார்களும் தொடர்ந்து சந்தையில் சிறந்த வரவேற்பையும், வலுவான தேவையையும் பெற்று வருகின்றன.

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் 14 எம்ஜி செலக்ட் ஷோரூம் மையங்களைக் கொண்டுள்ளது. எம்ஜியின் விலையுயர்ந்த கார்களை விற்பனை செய்வதற்கான இந்த ஷோரூம் மையங்கள், இந்திய கார் வாங்குபவர்களுக்கு சிறந்த கார் வாங்கும் அனுபவத்தை வழங்கும் விதமாக, தனிப்பயனாக்கப்பட்ட சேவைகள் உடன், எம்ஜி சைபர்ஸ்டர் மற்றும் எம்ஜி எம்9 பிரசிடென்ஷியல் லிமோசின் எலெக்ட்ரிக் கார்களை வாடிக்கையாளர்கள் நேரில் காண காட்சிக்கு கொண்டுள்ளன.

: எம்ஜி சைபர்ஸ்டர் ஸ்போர்ட்ஸ் காருக்கு கிடைத்துவரும் இந்த அபரிதமான வரவேற்பு இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்கள் மார்க்கெட்டும், ஸ்போர்ட்ஸ் கார்கள் மார்க்கெட்டும் எந்த அளவிற்கு மாறி வருகிறது என்பதை காட்டுகிறது. இதற்கு காரின் வடிவமைப்பு மற்றும் எம்ஜி செலக்ட் ஷோரூம்கள் உள்ளிட்டவற்றை காரணமாக சொன்னாலும், இவற்றை காட்டிலும் முக்கியமான காரணம், காருக்கு எம்ஜி நிர்ணயித்துள்ள குறைவான விலை ஆகும்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
Jaishankar
இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவு, புதுடெல்லியின் பரந்த அண்டை நாட்டு ஈடுபாட்டின் ஒருங்கிணைந்த பகுதி-இந்திய வெளிவிவகார அமைச்சர்
rohingya village burning
மியான்மருக்கு எதிரான தீர்ப்பு இனப்படுகொலையை நிரூபிப்பதை சாத்தியமாக்கியுள்ளது
raj somadeva pro
எலும்புக்கூடுகளைத் 'தொற்றுநோய்' என மூடிமறைக்கும் அவலம்: செம்மணி புதைக்குழியும் தமிழர்களின் நீதிக்கான நீண்ட காத்திருப்பும்
gota courts
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல கோட்டாபய விடுத்த கோரிக்கை-- நீதிமன்றம்நிராகரிப்பு!
ESWATINI
இரகசிய ஒப்பந்தம் மூலம் ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி தற்கொலை: பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கையால் சர்ச்சை
dinesh sca
தினேஷ் ஷாப்டர் கொலை: நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும் எவரும் கைது செய்யப்படவில்லை
Gender-violence-parliament
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - நாடாளுமன்றத்தில் ஹரிணி சஜித் செம்மஞ்சள் நிற ஆடைகளில்