கொழும்பு இரத்மலானை விமானநிலையத்தில் முதலாவது விமானம் தரையிறங்கி இன்றுடன் 90 வருடங்களாகின்றன.

1935ம் ஆண்டு நவம்பர் 27ம் திகதி கொழும்பு இரத்மலானை விமானநிலையத்தில் முதலாவது விமானம் தரையிறங்கியது.
அன்று காலை மட்ராஸ் பிளையிங் கிளப்பிலிருந்து புறப்பட்ட டிஎச்80ஏ பஸ்மொத் புதிதாக உருவாக்கப்பட்ட ஓடுபாதையில் தரையிறங்கியது.

இந்த விமானத்தை மட்ராஸ்பிளையிங் கிளப்பின் தலைமை பயிற்றுவிப்பாளரும் முதலாம் உலகப்போரின்போது முன்னாள் ரோயல் கடற்படை சேவையில் பணியாற்றியவருமான ஹரோல்ட் எஸ்எஸட் ரேஞ் டின்டே பிஸ்கோ செலுத்தினார்.
வணிக ஜெட் செயற்பாடுகள் விமானப்பயிற்சி உள்நாட்டு விமானப்பயணங்களிற்கு தற்போது ஒரு முக்கிய இடமாக திகழும் கொழும்பு இரத்மலானை விமானநிலையம் பிராந்திய சர்வதேச விமானங்களை வரவேற்க தயாராகிவருகின்றது,
இலங்கையின் மிகவும் வரலாற்று சிறப்புமிக்க விமானப் போக்குவரத்து நுழைவாயில்களில் ஒன்றாக அதன் பரிணாம வளர்ச்சியைத் தொடர்கிறது
