அனர்த்தத்தின் போது பொதுமக்கள் அவசர உதவிகளைப் பெற்றுக்கொள்ள மாவட்டச் செயலகத்தின் 0212117117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள முடியும் -யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அறிவிப்பு

அனர்த்த அபாய குறைப்பு நடவடிக்கைக்கு முன்னேற்பாடாக பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன்  அரசாங்க அதிபர் அலுவலகத்தில் கலந்துரையாடினார்.

இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர்
அனர்த்த அபாய குறைப்பு நடவடிக்கைகளுக்கு உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளை கேட்டறிந்துகொண்டதுடன், அனர்த்தம் ஏற்படும் போது உத்தியோகத்தர்கள் தமது கடமையிலிருந்து விலகமுடியாது எனவும், அடுத்த ஆண்டு தை மாதம் தொடக்கம் பங்குனி மாதம் வரை கிராம மட்ட ரீதியாக எடுக்க வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகளுக்கான திட்டங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும், தற்போது உடனடியாக வெள்ள நீர் வழிந்தோடாமைக்கான தடைகளை ஜேசிபி மூலம் அகற்றுவதற்கான இடங்களை உத்தியோகத்தர்களிடம் கேட்டறிந்து, உடனடியாக அனர்த்த முகாமைத்துவ சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதற்கட்டமாக 0.75 மில்லியன் ரூபா நிதியினை வழங்குமாறு அரசாங்க அதிபரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மேலும், பாதுகாப்பு நிலையம் அமைக்கப்பட்டால் அவ் நிலையத்திற்கு சுழற்சி முறையில் உத்தியோகத்தர்களை கடமைகளில் ஈடுபடுத்தும் செயற்பாட்டை பிரதேச செயலாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், உணவுப் பொதிகள், தறப்பாள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கும் போது பிரதேச செயலாளர்களின் ஒருங்கிணைப்பில் வழங்கப்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மேலும், அனர்த்தத்தின் போது பொதுமக்கள் அவசர உதவிகளைப் பெற்றுக்கொள்ள மாவட்டச் செயலக 0212117117 இலக்க தொலைபேசிக்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அவ் இலக்கத்திற்கு அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் பதிலளிப்பார் எனவும் அவர் பதிலளிக்காது தவறுதலாக தவறும்பட்சத்தில் தமது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு அத் தொலைபேசி இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

.
இக் கூட்டத்தில் வைத்து அரசாங்க அதிபரினால் அனர்த்த முகாமைத்துவ சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு 0.75 மில்லியன் ரூபா நிதியினை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உடனடியாகவே நிதி விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் திரு. ரி. என். சூரியராஜா, அனர்த்த நிவாரண சேவைகள் மாவட்ட அலுவலர் திருமதி. ஆ. நளாயினி, உதவிப் பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்
75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்