வெள்ளை மாளிகைக்கு அருகில் தேசிய காவல்படை வீரர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டவர் ஆப்கானை சேர்ந்தவர்-அமெரிக்காவில் இருக்க தகுதியில்லாத எந்த வெளிநாட்டவர்களையும் வெளியேற்ற நடவடிக்கை என டிரம்ப் தெரிவிப்பு

வெள்ளை மாளிகைக்கு அருகில் தேசிய காவல்படை வீரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்களிற்கு விசா வழங்குவது உட்பட குடிவரவு நடவடிக்கைகளை அமெரிக்கா உடனடியாக நிறுத்தியுள்ளது.

பாதுகாப்பு மற்றும் பரிசோதனை நெறிமுறைகள்”பற்றிய மறுஆய்வு நிலுவையில் உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள்  தெரிவித்தது.

புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டு தேசிய காவலர் வீரர்கள்படுகாயமடைந்தனர் .

-அமெரிக்காவில் இருக்க தகுதியில்லாத எந்த வெளிநாட்டவர்களையும் வெளியேற்ற நடவடிக்கை -டிரம்ப்

இந்தச் சம்பவத்தின் சந்தேக நபர் செப்டம்பர் 2021 இல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவிற்கு வந்தவர் என்று கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலை “பயங்கரவாதச் செயல்” என்று அமெரிக்க
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளதுடன் “இங்கு இருக்கத் தகுதியில்லாத எந்த நாட்டிலிருந்தும்” வெளிநாட்டவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி அதிபர் ஜோபைடன்  நிர்வாகத்தின் கீழ் 2021 இல் நாட்டில் இருந்து அமெரிக்கா குழப்பத்துடன் வெளியேறியதைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்கள் சிறப்பு குடிவரவுப் பாதுகாப்புகளின் ) கீழ் அமெரிக்காவிற்குள் நுழைந்தனர்.

உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை  ஒரு செய்திக்குறிப்பில் சந்தேக நபரை ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த “குற்றவியல் வெளிநாட்டவர்” ரஹ்மனுல்லா லகமால் என்று பெயரிட்டது.

அவர் 2024 இல் புகலிடக் கோரி விண்ணப்பித்ததாகவும் அவரது விண்ணப்பம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அனுமதிக்கப்பட்டதாகவும் ஒரு அதிகாரி  சிபிஎஸ் நியுசிடம் இடம் தெரிவித்தார்.
. 29 வயதான இவர் ‘ஆபரேஷன் அல்லிஸ் வெல்கம்’ (Operation Allies Welcome ) எனப்படும் திட்டத்தின் கீழ் நாட்டிற்குள் நுழைந்ததாகக் கருதப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து பேசிய டிரம்ப் “பைடன் நிர்வாகத்தின் கீழ் ஆப்கானிஸ்தானில் இருந்து எங்கள் நாட்டிற்குள் நுழைந்த ஒவ்வொரு வெளிநாட்டவரையும் அமெரிக்கா இப்போதுசோதனையிடவேண்டும் என தெரிவித்துள்ளார்

நாட்டின் தலைநகருக்கு தேசிய காவலர் படைகளை ஒருங்கிணைக்கும் கூட்டுப் பணிக்குழு டிசி ( புதன்கிழமை  ஃபேரகுட் சதுக்க மெட்ரோ நிலையம் (அருகே இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறியது.
. அந்த வீரர்கள்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் – இது அலுவலக ஊழியர்கள் அதிகம் கூடும் மதிய உணவு இடமாகும்.சந்தேக நபர் “மூலையில் வந்து” “உடனடியாக சுடத் தொடங்கினார்” என்று பெருநகர காவல்துறை உதவித் தலைவர் ஜெஃப் கரோல் கூறினார் மேலும் வீரர்கள் “பதுங்கியிருந்து தாக்கப்பட்டனர்” என்றும் அவர் கூறினார்.
. அருகில் இருந்த மற்ற தேசிய காவலர் உறுப்பினர்கள் துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டு தலையிட்டு காவல்துறை வரும் வரை சந்தேக நபரைப் பிடித்து வைத்திருந்தனர் என்று அவர் கூறினார்.
.
டிரம்ப் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் மேலும் 11 நாடுகளின் குடிமக்கள் மீது பயணத் தடையை விதித்தார்.
. 2021 இல் தலிபான்கள் நாட்டை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு முன்பு அமெரிக்க இராணுவத்துடன் நேரடியாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு குடிவரவு விசாக்களைவைத்திருக்கும் ஆப்கானிய நாட்டவர்கள் இந்தத் தடைகளிலிருந்து சில விதிவிலக்குகளில் இருந்தனர்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு நாடு கடத்தலில் இருந்து பாதுகாப்பை வழங்கிய ஒரு திட்டத்தையும் டிரம்ப் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.
.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
Jaishankar
இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவு, புதுடெல்லியின் பரந்த அண்டை நாட்டு ஈடுபாட்டின் ஒருங்கிணைந்த பகுதி-இந்திய வெளிவிவகார அமைச்சர்
rohingya village burning
மியான்மருக்கு எதிரான தீர்ப்பு இனப்படுகொலையை நிரூபிப்பதை சாத்தியமாக்கியுள்ளது
raj somadeva pro
எலும்புக்கூடுகளைத் 'தொற்றுநோய்' என மூடிமறைக்கும் அவலம்: செம்மணி புதைக்குழியும் தமிழர்களின் நீதிக்கான நீண்ட காத்திருப்பும்
gota courts
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல கோட்டாபய விடுத்த கோரிக்கை-- நீதிமன்றம்நிராகரிப்பு!
ESWATINI
இரகசிய ஒப்பந்தம் மூலம் ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி தற்கொலை: பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கையால் சர்ச்சை
dinesh sca
தினேஷ் ஷாப்டர் கொலை: நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும் எவரும் கைது செய்யப்படவில்லை
Gender-violence-parliament
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - நாடாளுமன்றத்தில் ஹரிணி சஜித் செம்மஞ்சள் நிற ஆடைகளில்