அனர்த்த சூழ்நிலை காரணமாக நாளை பாராளுமன்ற அமர்வு 30 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது – நாளை மறுதினம் பாராளுமன்றம் கூடாது – பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம்.

• டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் வரவுசெலவுத்திட்ட விவாதத்தை இரவு 12 மணி வரை நடாத்துவதற்கும் தீர்மானம்.

தற்போதுள்ள அனர்த்த சூழ்நிலை காரணமாக, நாளை (28) பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டவிவாதத்தை நடத்தாமல் இருப்பதற்கும், பாராளுமன்ற அமர்வை நாளை மு.ப. 9.00 மணி முதல் மு.ப. 9.30 மணி வரை மாத்திரம் நடாத்துவதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

சபாநாயகர்ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (27) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாளை (28) மு.ப. 9.00 மணி முதல் மு.ப. 9.30 மணி வரை, நிலையியற் கட்டளைகள் 22 இன் 1 முதல் 6 வரையிலான பாராளுமன்ற அலுவல்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

 

அதன் பின்னர் மு.ப. 9.30 மணிக்கு, 2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் 2025 ஒக்டோபர் 24 ஆம் திகதிய 2459/52 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் விவாதமின்றி அங்கீகரிக்கப்படவுள்ளன.
அத்துடன், நாளை மறுதினம் (29) பாராளுமன்றத்தை கூட்டாமல் இருப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மீண்டும் எதிர்வரும் டிசம்பர் 1ஆம் திகதி திங்கட்கிழமை மற்றும் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் இரவு 12.00 மணி வரை வரவுசெலவுத்திட்ட விவாதத்தை நடாத்துவதற்கும் இங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, டிசம்பர் 1 திங்கட்கிழமை மு.ப. 9.00 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.

மு.ப. 9.00 மணி முதல் மு.ப. 9.30 மணி வரையிலான நேரம் நிலையியற் கட்டளைகள் 22 இன் 1 முதல் 6 வரையிலான பாராளுமன்ற அலுவல்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரையான காலம் வாய்மூல விடைக்கான 5 கேள்விகளுக்காகவும், அதன் பின்னர் மு.ப. 10.00 மணி முதல் மு.ப.10.30 மணி வரை நிலையியற் கட்டளைகள் 27(2) இன் கீழ் 2 கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 6.00 மணி வரை இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் ஒதுக்கீடுகள் விவாதிக்கப்பட உள்ளன. அதன் பின்னர் பி.ப. 6.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு என்பவற்றின் ஒதுக்கீடுகள் விவாதிக்கப்பட உள்ளன.

டிசம்பர் 2 செவ்வாய்க்கிழமை மு.ப. 9.00 மணி முதல் மு.ப. 10.30 மணி வரையான காலம் முந்தைய நாளுக்கு அமைய பாராளுமன்ற அலுவல்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 6.00 மணி வரை வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் ஒதுக்கீடுகள் விவாதிக்கப்பட உள்ளன. அதனையடுத்து, பி.ப. 6.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் ஒதுக்கீடுகளை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
Jaishankar
இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவு, புதுடெல்லியின் பரந்த அண்டை நாட்டு ஈடுபாட்டின் ஒருங்கிணைந்த பகுதி-இந்திய வெளிவிவகார அமைச்சர்
rohingya village burning
மியான்மருக்கு எதிரான தீர்ப்பு இனப்படுகொலையை நிரூபிப்பதை சாத்தியமாக்கியுள்ளது
raj somadeva pro
எலும்புக்கூடுகளைத் 'தொற்றுநோய்' என மூடிமறைக்கும் அவலம்: செம்மணி புதைக்குழியும் தமிழர்களின் நீதிக்கான நீண்ட காத்திருப்பும்
gota courts
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல கோட்டாபய விடுத்த கோரிக்கை-- நீதிமன்றம்நிராகரிப்பு!
ESWATINI
இரகசிய ஒப்பந்தம் மூலம் ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி தற்கொலை: பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கையால் சர்ச்சை
dinesh sca
தினேஷ் ஷாப்டர் கொலை: நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும் எவரும் கைது செய்யப்படவில்லை
Gender-violence-parliament
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - நாடாளுமன்றத்தில் ஹரிணி சஜித் செம்மஞ்சள் நிற ஆடைகளில்