இன்று பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த விமான பயணிகளிற்கான ஆலோசனையொன்றை வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானநிலையத்திற்கு பயணிப்பதற்கு முன்னர் விமானநிலையத்துடன் தொடர்புகொண்டு சமீபத்தைய பயண நிலைமையை உறுதி செய்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் நிலவும் மோசமான காலநிலையால் விமானப்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
இணையத்தளத்திற்கு செல்வதன் மூலமும் பின்வரும் தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொள்வதன் மூலமும பயணிகள் தங்கள் பயண நிலைமை குறித்த விபரங்களை அறிந்துகொள்ள முடியும்
1979 (within Sri Lanka)
+94 117 77 1979 (international)
