நாட்டில் நிலவும் மோசமான காலநிலை மற்றும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிவாரணப்பணிகள் குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு எடுத்துரைப்பதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் மெய்நிகர் சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
பாதிக்கப்பட்ட சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் வெள்ளத்தின் பின்னர் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமர் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்துவார்.
இந்த சவாலான தருணத்தில் வெளிநாட்டு தூதரகங்கள் இலங்கைக்கு தங்கள் உறுதியான ஆதரவை வழங்கவுள்ளன என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.
மனிதாபிமான உதவிகளை வழங்குவது நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளிற்கு உதவுவதில் உள்ளுராட்சி அமைப்புகளுடன் இணைந்து தாங்கள் தயார் என வெளிநாட்டு தூதரகங்கள் தெரிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகின்றது.