வடக்குகிழக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் திருடர்கள் அச்சம் காரணமாக தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற மறுக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மக்கள் தங்கள் பொருட்கள் திருட்டு போகலாம் என்ற அச்சத்தினால் வீடுகளில் இருந்து வெளியேற மறுக்கின்றனர் என தெரிவித்துள்ள அவர் மக்கள் தற்காலிக முகாம்களிற்கு செல்லாமல் வீடுகளில் தங்கியிருந்தால் வீடுகளிற்கு நிவாரணங்களை அனுப்ப முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் இந்த விடயத்தினை சட்ட அடிப்படையில் ஆராய்ந்து தீர்வை முன்வைக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
