நாட்டில் மோசமான காலநிலை நிலவுகின்றமையால் பெருமளவில் நோயாளர்களிற்கு சிகிச்சை வழங்குவதற்காக மருத்துவமனைகள் தங்கள் தயார்படுத்தி வருகின்ற அதேவேளை மருத்துவ அதிகாரிகள் மருத்துவ குழுக்களை தயார் நிலையில் வைத்துள்ளனர்.
அவசரகாலநிலை குழுக்களை களத்தில் இறக்கியுள்ளதாகவும் மின்பிறப்பாக்கிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தடையற்ற மருத்துவசேவையை வழங்குவதே முன்னுரிமைக்குரிய விடயமாக காணப்படுகின்றது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மழை வெள்ளநீரின் அளவு அதிகரித்துவருவதால் பல மருத்துவமனைகளின் நடவடிக்கைகள் பாதிப்படையும் நிலையேற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.