டிட்வா புயலினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவுவதற்காக சகர்பந்து என்ற நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது

டிட்வா புயலை தொடர்ந்து இலங்கைக்கு இந்தியா உதவிக்கரத்தை நீட்டுகின்றது என தெரிவித்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்தியா 4.5 தொன் உலர் உணவையும்,ஏனைய அத்தியாவசிய பொருட்களையும் ஐஎன்எஸ் உதயகிரி ஐஎன்எஸ் விக்ராந்திலிருந்து வழங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

இந்தியா இலங்கை மக்களுடன் உறுதியாக நிற்பதுடன் அயல்நாட்டிற்கு முன்னுரிமை என்ற தனது கொள்கையை மீள உறுதியாக வலியுறுத்துகின்றது என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
