இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவுவதற்கு இந்தியா தயாராகவுள்ளது என இந்திய பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
டிட்வா புயல்காரணமாக தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களிற்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள இந்திய பிரதமர் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களினதும் பாதுகாப்பு வேகமான மீட்சி ஆகியவற்றிற்காக பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.
எங்கள் நெருக்கமான கடல்சார் அயல்நாட்டுக்கான ஆதரவின் ஒருபகுதியாக ஒப்பரேஷன் சகர்பந்துவின் கீழ் இந்தியா உடனடியாக அவசியமான நிவாரண பொருட்களை வழங்கியுள்ளது என தெரிவித்துள்ள இந்திய பிரதமர்நிலைமை இன்னமும் மாற்றமடையும் போது மேலதிக உதவிகளை வழங்க தயாரக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
அயல்நாடுகளிற்கு முன்னுரிமை என்ற வெளிவிவகார கொள்கையின் அடிப்படையில் இந்த தேவையான தருணத்தில் இந்தியா இலங்கையுடன் உறுதியாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.