இலங்கையில் இயற்கை பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களிற்கான நிவாரண நடவடிக்கைகளிற்கு ஆதரவளிப்பதற்கு தயாராக உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முதன்மை துணை செய்தி தொடர்பாளர் டாமிபிகோட் இதனை தெரிவித்துள்ளார்.
உயிர் இழப்புக்கு நாங்கள் இரங்கல் தெரிவிக்கிறோம், மேலும் முக்கியமான உதவிகளை வழங்க அயராது பாடுபடுபவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். வரும் நாட்களில் நிவாரண முயற்சிகளை ஆதரிக்க அமெரிக்கா தயாராக உள்ளதுஎன தெரிவித்துள்ளார்