நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை பகுதிகளில் உள்ள மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களிற்கு வெளியேறுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மோதரை மட்டக்குளிய பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படும் சூழ்நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் மட்டக்குளிய பூட்சிட்டிக்கு அருகில் உள்ள சென்ஜோன்ஸ் மகாவித்தியாலயம் பாதுகாப்பான தங்குமிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
