டிட்வா சூறாவளியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கையின்கம்பளை மற்றும் கண்டி நகரங்களுக்கான போக்குவரத்து மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளது. நிவாரணப் பணியாளர்களும் இராணுவத்தினரும் மக்களுக்கு மின்சாரம் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளை மீளவழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
“பெருக்கெடுத்து ஓடிய மகாவலி ஆற்றின் காரணமாக கம்பளை கெலி-ஓயா பேராதனை மற்றும் கட்டம்பே ஆகிய இடங்களில் ஏற்பட்ட வெள்ள மட்டம் இப்போது தணிந்துள்ளது” என்று அமைச்சர் குணசேன தெரிவித்தார்.
“பேராதனை முதல் கம்பளை வரையிலான சாலையைத் திறந்துள்ளோம். குருநாகல் – கலேதெர சாலை வழியாக கண்டிக்குத் தேவையான எரிபொருள் மருந்து மற்றும் உணவு விநியோகப் பாதை மீட்டெடுக்கப்பட்டுள்ளது.”
“பாறை விழுதல் மற்றும் நிலச்சரிவு காரணமாகத் தடைபட்டிருந்த கடுங்கண்ணாவ வீதியை எங்களால் திறக்க முடியவில்லை. மேலும் பாறைகள் விழும் அச்சுறுத்தல் இருப்பதால் உடனடியாக அந்தச் சாலையைத் திறக்க நாங்கள் எதிர்பார்க்கவில்லை.”
குருநாகல்-கலேதெர சாலையில் 14 பாறை வீழ்ச்சிகள் ஏற்பட்டன என்றும் தற்போது ஒரு வழிப்பாதை மட்டுமே திறக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். அவ்வப்போது பாறை விழுதல்கள் ஏற்படுவதால் அந்தச் சாலையைத் திறந்து வைக்கப் பல குழுக்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றன.
கண்டி நகரில் கடந்த மூன்று நாட்களாக நீரும் மின்சாரமும் இல்லை.
“இன்று மாலைக்குள் கண்டி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளுக்கு மின்சாரத்தை மீட்டெடுக்க முடியும் என்று அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்துள்ளனர். அதன் மூலம் தொலைபேசி கோபுரங்கள் சீரமைக்கப்பட்டு நாளைக்குள் மக்கள் தங்கள் தொலைபேசிகளை சார்ஜ் செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.”
கண்டியில் உள்ள அனைத்து நீரேற்று நிலையங்களும் வெள்ளத்தில் மூழ்கினஇ மேலும் நீர் எடுக்கும் பகுதிகள் சகதியால் அடைக்கப்பட்டன. மின்பிறப்பாக்கியும் (புநநெசயவழச) சேதமடைந்துள்ளது.
“பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதால் நீரை மீட்டெடுக்கும் பணிக்கு இராணுவ வீரர்கள் உதவுகிறார்கள்இ” என்று குணசேன கூறினார்.
“மூன்று நாட்களுக்குள் நீர் விநியோகத்தை மீட்டெடுக்க நாங்கள் நம்புகிறோம். இதற்கிடையில் பவுசர்கள் மூலம் நீரை வழங்குவோம். மருத்துவமனைகளுக்கும் பவுசர்கள் மூலம் நீரை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்.”
“பவுசர்களின் விநியோகம் குறைவாக இருப்பதால் தனியாரிடமிருந்து வாடகைக்கு எடுத்துள்ளோம். மக்களிடம் தண்ணீர் இருந்தால் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும்இ மழைநீரைச் சேகரிக்க முயற்சிக்குமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.”
குருநாகலில் இருந்து எரிபொருள் தாங்கிகள் அனுப்பப்பட்டு வருவதாகவும் மக்கள் அதிகமாக எரிபொருளை நிரப்ப வேண்டாம் என்றும் அமைச்சர் குணசேன கோரிக்கை விடுத்தார். “இலங்கையில் போதுமான எரிபொருள் உள்ளது நாங்கள் வழங்குவோம் எந்தப் பற்றாக்குறையும் இருக்காது எனவே எரிபொருளைச் சேமிக்க முயற்சிக்க வேண்டாம்.”
“பொருட்களை வாங்குதல் மற்றும் மருத்துவமனைக்குச் செல்வது போன்ற அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே பயணிக்கவும். சுற்றுலா செல்வதைத் தவிர்க்கவும்.”
பேராதனை பல்கலைக்கழக விடுதியில் உள்ள மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்களுக்கு உணவு வழங்கப்படுவதாகவும் அருகிலுள்ள கடைகளிலும் பொருட்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
