இலங்கையின் கத்தோலிக்க மக்கள் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை உங்கள் சகோதரர்களாக கருதுங்கள் உதவிக்கரம் நீட்டுங்கள் என கர்தினால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இயற்கை அனர்த்தம் குறித்து பெரும் கவலையடைந்துள்ளோம் விரைவில் இந்த நிலை மாறவேண்டும் என பிரார்த்திக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.