சீரற்ற காலநிலை அனர்த்தத்தின் மத்தியில் இலங்கையின் மீட்புப் பணிகளுக்கான இந்தியாவின் வான்வழி ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பன்னல பகுதியில் வெள்ள நீரில் சிக்கிய எட்டு பேரை இரண்டு இந்தியக் கடற்படை ஹெலிகாப்டர்கள் நவம்பர் 29 அன்று மீட்டன.
இந்தியக் கடற்படையின் ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பலில் இருந்து இயங்கும் இரண்டு விமானங்கள் உட்பட நான்கு இந்திய ஹெலிகாப்டர்கள் தற்போது நாடு முழுவதும் மீட்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
உயரும் நீர் மட்டம் பல வீடுகளுக்கான அணுகலைத் துண்டித்த பன்னல பகுதியில் ஹெலிகாப்டர்கள் பல முறை மீட்புப் பணிகளை மேற்கொண்டன. மீட்கப்பட்ட நபர்கள் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளூர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்திய வான்வழி வளங்கள் இலங்கை விமானப்படை கடற்படை இராணுவம் காவல்துறை மற்றும் ஏனைய முதன்மை மீட்புக் குழுக்களுடன் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வெளியேற்றுதல் பொருட்களை விநியோகித்தல் மற்றும் அவசரகால உதவிகளை வழங்கி வருகின்றன.