வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டும் வெளியேற மறுத்த மக்கள்- உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறுவடக்கு ஆளுநர் அதிகாரிகளிற்கு அறிவுறுத்தல்

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பேரிடர் நிலைமைகளை நேரில் பார்வையிடுவதற்காக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று சனிக்கிழமை (29.11.2025) கிளிநொச்சி வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு அவசர களப்பயணத்தை மேற்கொண்டார்.

மாவட்டச் செயலர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுடன் களத்தில் நின்றவாறு நிலைமைகளை ஆராய்ந்த ஆளுநர் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு பணிப்புரை விடுத்தார்.

முதலாவதாக கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்குப் பயணம் செய்த ஆளுநர்இ மாவட்டச் செயலர் சு.முரளிதரன் அவர்களுடன் கலந்துரையாடினார். நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகள் குறித்தும் ஆளுநர் கேட்டறிந்தார்.

பரந்தன் இந்து மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாமுக்குச் சென்ற ஆளுநர்இ அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள பரந்தன் குமரபுரம் உமையாள்புரம் பகுதி மக்களைச் சந்தித்தார். அவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்ததுடன் மக்களின் தேவைகள் குறித்தும் கலந்துரையாடினார்.

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் கடற்படை மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் மீட்பு நடவடிக்கைகளை ஆளுநர் பார்வையிட்டார். வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டும் வெளியேற மறுத்த மக்களை நிலைமையின் விபரீதம் கருதி உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஆளுநர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

முல்லைத்தீவு – பரந்தன் பிரதான வீதியில் கண்டாவளை பிரதேச செயலகத்துக்கு அண்மையிலுள்ள பாலம் வெள்ளத்தால் உடையத் தொடங்கியுள்ளமையையும் அதனால் அப்பகுதிக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதையும் ஆளுநர் பார்வையிட்டார்.

இரணைமடு குளத்துக்கு நேரடியாகச் சென்ற ஆளுநர் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் பொறியியலாளர் த.ராஜகோபு அவர்களுடன் நிலைமைகளை ஆராய்ந்தார்.

குளத்தின் வான் கதவுகள் மற்றும் கலிங்கு பகுதியூடாக வெளியேறும் நீர் பரந்து செல்லும் வழியில்இ முதலாவது படிக்கட்டு பிரதேசத்திலுள்ள அணையானது அரிப்புக்குள்ளாகியுள்ளமையை ஆளுநர் பார்வையிட்டார். பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதியிலிருந்து மக்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் அணை அரிக்காமல் இருப்பதற்குத் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்குமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி பிரதேச மருத்துவமனைக்குச் சென்ற ஆளுநர்இ அங்கு ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டார். மருத்துவமனை வெள்ளத்தால் சூழப்பட்டதற்குக் காரணமான வாய்க்கால்களையும் பார்வையிட்ட அவர் இதற்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் வகையில் விரைவில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதாக உறுதியளித்தார்.
இறுதியாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்குச் சென்ற ஆளுநர்இ மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரனுடன் கலந்துரையாடினார்.
மாவட்டத்தில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளமைஇ நாயாற்றுப் பாலம் சேதமடைந்துள்ளமை மற்றும் பல வீதிகள் துண்டிக்கப்பட்டுள்ளமை குறித்து மாவட்டச் செயலர் விளக்கமளித்தார்.
தன்னார்வலர்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்வது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஆளுநர்இ மாவட்டச் செயலகங்கள் ஊடாக முறையான கோரிக்கைகள் முன்வைக்கப்படும்போதுஇ சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஒருங்கிணைந்து அந்த உதவிகளைப் பெற்றுத்தர முடியும் எனக் குறிப்பித்தார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
Jaishankar
இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவு, புதுடெல்லியின் பரந்த அண்டை நாட்டு ஈடுபாட்டின் ஒருங்கிணைந்த பகுதி-இந்திய வெளிவிவகார அமைச்சர்
rohingya village burning
மியான்மருக்கு எதிரான தீர்ப்பு இனப்படுகொலையை நிரூபிப்பதை சாத்தியமாக்கியுள்ளது
raj somadeva pro
எலும்புக்கூடுகளைத் 'தொற்றுநோய்' என மூடிமறைக்கும் அவலம்: செம்மணி புதைக்குழியும் தமிழர்களின் நீதிக்கான நீண்ட காத்திருப்பும்
gota courts
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல கோட்டாபய விடுத்த கோரிக்கை-- நீதிமன்றம்நிராகரிப்பு!
ESWATINI
இரகசிய ஒப்பந்தம் மூலம் ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி தற்கொலை: பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கையால் சர்ச்சை
dinesh sca
தினேஷ் ஷாப்டர் கொலை: நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும் எவரும் கைது செய்யப்படவில்லை
Gender-violence-parliament
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - நாடாளுமன்றத்தில் ஹரிணி சஜித் செம்மஞ்சள் நிற ஆடைகளில்