வெலிமடையில் மண்சரிவில் சிக்கிய மூன்று வெளிநாட்டவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
வெலிமடை ரெட்டபொல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியிருந்தவர்களே பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
மண்சரிவு காரணமாக வெளிநாட்டவர்கள் அந்த பகுதியில் சிக்குண்டுள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மூலம் இவர்கள் காப்பாற்றப்பட்டனர் என இவர்கள் மெக்சிக்கோ ஆர்ஜென்டீனாவை சேர்ந்தவர்கள் என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த மூன்று பெண்களும் தற்போது அருகில் உள்ள மசூதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
