இயற்கை அனர்த்தத்தினால் சிக்குண்டுள்ள சுற்றுலா பயணிகளிற்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக இலங்கையின் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இக்காலப்பகுதியில் விசா முடிவடையும் சுற்றுலாப்பயணிகளுக்கான விசாக்களை மீள புதுப்பிப்பதற்கு குடிவரவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதேவேளை புறப்படும் தினத்தை நீடிப்பதற்காக மேலதிக கட்டணங்களை அறவிடுவதை விமானசேவைகள் கைவிட்டுள்ளன.
இன்று முடிவடையும் விசாக்களும், விசாக்களை புதுப்பிக்க முடியாத நிலையில் உள்ளவர்களின் விசாக்களும் நீடிக்கப்படும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் புத்திக்க ஹோவாவசம் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப்பயணிகள் எவரும் பெரும் ஆபத்து எதனையும் எதிர்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள அவர் நுவரேலியா கண்டி பதுளை போன்ற பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால சுற்றுலாப்பயணிகள் சிக்குண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் முப்;படையினர் பொலிஸாரின் உதவியுடன் அவர்கள் விஜயம் செய்ய திட்;டமிட்ட பகுதிகளிற்கு அருகில் உள்ள ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ள அவர் வீதிப்போக்குரவத்து சரிசெய்யப்பட்டதும் சுற்றுலாப்பயணிகள் தாங்கள் விரும்பும் பகுதிகளிற்கு செல்லலாம் என தெரிவித்துள்ளார்.
