ஏர்பஸ் ஏ320 விமானங்களில் மென்பொருளை மாற்ற உத்தரவு: விமான சேவைகள் பாதிக்க வாய்ப்பு

புதுடெல்லி: ஏர்​பஸ் ஏ320 ரக விமானங்​களின் கட்​டுப்​பாட்டு கரு​வி​யில், டேட்டா பாதிப்பு பிரச்​சினை ஏற்​படு​வ​தால், மென்​பொருளை மாற்​றும்​படி ஏர்​பஸ் நிறு​வனம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. இதனால் 200-க்​கும் மேற்​பட்ட விமான சேவை​கள் தாமத​மாகலாம் அல்​லது ரத்து செய்​யப்​படும் வாய்ப்​பு​கள் உள்​ளன.

தீவிர சூரிய கதிரியக்​கம் காரண​மாக ஏர்​பஸ் ஏ320 ரக விமானங்​களின் கட்​டுப்​பாட்டு கரு​வி​யில் டேட்டா பாதிப்பு ஏற்​படும் வாய்ப்பு உள்​ள​தால் மென்​பொருளை மாற்​றும்​படி​யும், சில விமானங்​களில் ஹா்ர்​டு​வேரை மாற்​றியமைக்​கும்​படி​யும் ஏர்​பஸ் நிறு​வனம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. டேட்டா பாதிப்பு ஏற்​பட்ட விமானங்​களில் எலிவேட்​டர் எலி​ரான் கம்ப்​யூட்​டரை (இஎல்​ஏசி) பொருத்​தும்​படி​யும் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. இதற்கு ஏ320 ஏர்​பஸ் விமானங்​களை தரை​யிறக்கி மாற்​றங்​கள் செய்​யப்பட வேண்​டும். இதன் காரண​மாக ஏர்​பஸ் ஏ320 விமானங்​களை இயக்​கும் விமான நிறு​வனங்​களின் சேவை​கள் பாதிக்​கப்​படலாம்.

560 ஏர்​பஸ் விமானங்​கள்: இந்​தி​யா​வில் உள்ள விமான நிறு​வனங்​களிடம் சுமார் 560 ஏ320 ஏர்​பஸ் விமானங்​கள் உள்​ளன. இவற்​றில் 200 முதல் 250 விமானங்​களில் மென்​பொருள் மாற்​றம் செய்​யப்பட வேண்​டும் அல்​லது ஹார்​டு​வேர் மாற்​றியமைக்​கப்பட வேண்​டும்.

இந்​தி​யா​வில் இயக்​கப்​படும் இண்​டிகோ, ஏர் இந்​தி​யா, ஏர் இந்​தியா எக்​ஸ்​பிரஸ் விமான நிறு​வனங்​களிடம் ஏ320 ஏர்​பஸ் ரக விமானங்​கள் அதி​கள​வில் பயன்​படுத்​தப்படுகின்றன. இதனால் இவற்​றின் விமான சேவை​களில் தாமதம் ஏற்​படலாம் அல்​லது விமான சேவை​கள் ரத்து செய்​யப்​படும் வாய்ப்​பு​கள் உள்​ள​தாக கூறப்​படு​கிறது. இப்​பிரச்​சினையை சரிசெய்​யும் பணி​யில் அனைத்து வி​மான நிறு​வனங்​களும்​ தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளன.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்