இது போன்ற ஒரு தருணத்துக்காகவே காத்திருந்தோம். டிட்வா புயல் முழுமையாக இலங்கையை விட்டு நீங்கியது. — நாகமுத்து பிரதீபராஜா –

30.11.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி
++++++++++++++++++++++++++++++++++++

+++++++++++++++++++++++++++++++++++++
இன்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் சில பகுதிகளுக்கு மிதமானது முதல் சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் அவ்வப்போது காற்று சற்று வேகமாக வீசும்.
புயல் எம்மை விட்டு முழுமையாக நீங்கியிருந்தாலும் ஏற்கனவே கிடைத்த மழை காரணமாக இன்னும் மூன்று நாட்களுக்கு ஆறுகளுக்கும் குளங்களுக்கும் நீர் வரத்து இருக்கும்.
குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியாவுக்கு நீர் வரத்து நாளை முதல் குறைவடையும். ஆனால் மன்னாருக்கான நீர்வரத்து எதிர்வரும் 03.12.2025 வரை இருக்கும்.
ஆகவே குளங்களின் வான் பாயும் பகுதிகளை அண்மித்த மற்றும் ஆற்றங்கரையோரங்களில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தம் தொடர்பில் தொடர்ந்தும் அவதானமாக இருப்பது அவசியம்.
வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு பகுதி கடல்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.


—————————————————————————
ஆனாலும் இந்த புயலோடு தொடர்புடைய வானிலை சார்ந்து இனி அச்சப்பட எதுவுமில்லை.
—————————————————————————-
கடந்த சில நாட்களாக கோரத்தாண்டவமாடி, இலங்கையின் காலநிலை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிகமான பாதிப்புக்களை ஏற்படுத்திய டிட்வா புயல் தற்போது இலங்கையை விட்டு முழுமையாக வெளியேறி தற்போது தமிழ்நாட்டின் காரைக்காலுக்கு மேற்கே நிலைகொண்டுள்ளது.
இன்னும் ஒரு நாள் டிட்வா இலங்கையில் நிலைத்திருந்தால் மாபெரும் பேரழிவுகள் இலங்கையில் நிகழ்ந்திருக்கும். குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் மிகப்பெரும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கும்.

இந்த டிட்வா புயலின் நகர்வில் பல தடவைகள் எனக்கு அதிக அச்சம் இருந்தது. ஏனெனில் அதன் நகர்வு அத்தகையது.
கடந்த 24.11.2025 அன்று தீவிர தாழமுக்கமாக அதன் நகர்வு வேகம் மணிக்கு 9 கி.மீ. ஆக இருந்தது. பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய பின் மணிக்கு 11 கி.மீ. ஆக இருந்தது. பின்னர் புயலாக மாறியபோது சிறிது நேரம் மணிக்கு 14 ஆக இருந்தது. பின்னர் மத்திய மலை நாட்டின் செல்வாக்கு காரணமாக மணிக்கு 9 கி.மீ. ஆக குறைந்தது. பின்னர் மணிக்கு 4 ஆகக் குறைந்தது.

உண்மையில் இந்த நேரத்தில் மிகப்பெரும் அச்சநிலை இருந்தது. ஏனெனில் ஒரு புயலின் நகர்வு வேகம் குறைந்தால் அது நிலைத்து நின்று பெரும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும்.
ஆனால் அது மத்திய மலை நாட்டின் செல்வாக்கிலிருந்து விடுபட்டு பொலன்னறுவைக்கு வந்த பின் மீண்டும் வேகமெடுத்து மணிக்கு 14 கி.மீ. நகர்ந்தது. பின்னர் மீண்டும் திருகோணமலைக்கு வந்த மீளவும் வேகம் குறைவடைந்து மணிக்கு 8 கி.மீ. ஆகக் குறைந்தது. இந்த நிலையில் மீண்டும் ஒரு அச்சநிலை ஏனெனில் ஏற்கனவே வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு கனமழை கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால் மீளவும் வேகமெடுத்து மணிக்கு 12 கி.மீ என்ற வேகத்தில் கடலுக்குள் சென்றது.

இந்த டிட்வா புயலின் இரண்டு விடயங்களுக்கு இலங்கையின் மத்திய மலைநாடு காரணமாயிருந்தது.
1. புயலின் நகர்வு வேகத்தையும் மையச் சுழற்சியின் வேகத்தையும் கட்டுப்படுத்தியது.
2. மிகக் கனமழை பொழியவும் காரணமாக இருந்தது.
எவ்வாறாயினும் இந்த டிட்வா புயல் இன்னும் ஒரு நாள் இலங்கையில் நிலைத்திருந்தாலும் இலங்கையின் நிலைமை மிக மிக கவலைக்கிடமாக இருந்திருக்கும்.
—————————————————————————-
இலங்கையின் நவீன வரலாற்றில் நிகழ்ந்த ஆகப்பெரிய காலநிலை சார் இயற்கை அனர்த்தம் இதுவே.
—————————————————————————–
இது இலங்கையில் அதிக உயிரிழப்புக்களை ஏற்படுத்திய இரண்டாவது இயற்கை அனர்த்தமாக மாறியுள்ளது. முதலாவது 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி.
—————————————————————————–
ஆனால் பொருளாதாரப் பாதிப்பினை ஏற்படுத்திய இயற்கை அனர்த்தங்களில் இதுவே முதலாவது. ஏனெனில் சுனாமியினுடைய பொருளாதாரப் பாதிப்புக்கள் கரையோரம் சார்ந்து மட்டுமே இருந்தது. ஆனால் டிட்வா புயல் நாடு முழுவதும் பாதித்துள்ளது. இனனும் சில நாட்களில் தாக்க மதிப்பீட்டு அறிக்கை வரும்போது அதனை உணரலாம்.


—————————————————————————–
உயிரிழப்புக்கள் கூட நாம் நினைப்பதை விட மிக அதிகமாக இருக்கவே வாயப்புண்டு.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதனால் 13 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. ஆனால் பில்லியன் கணக்கான பொருளாதார இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இலட்சக்கணக்கான வயல் நிலங்கள், தோட்ங்கள் அழிந்துள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்துள்ளன. இலட்சக்கணக்கான கால்நடைகளின் நிலை என்னவென்று தெரியவில்லை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 200க்கு மேற்பட்ட குளங்கள் முழுமையாக புனரமைக்க வேண்டும். வீதிகள், பாலங்கள், புகையிரதப்பாதைகள், பொது நிறுவனங்கள் சேதமடைந்துள்ளன.

அனர்த்தத்துக்கு பின்னான நிலைமையிலும் நாம் மிக அவதானமாகவும் பொறுப்போடும் நடந்து கொள்ளவேண்டும்.
திட்டமிட்ட வினைத்திறனான அனர்த்த மீட்பு செயற்பாடுகள் அவசியம். குறுங்கால அனர்த்த மீட்பு செயற்பாடுகளும் நீண்ட கால அனர்த்த மீட்பு செயற்பாடுகளும் ஒன்றுடனொன்று இணைந்த வகையில் அமைய வேண்டும்.
இந்த மிகப்பெரிய அனர்த்தத்திலிருந்து இலங்கையர்கள் அனைவரும் மீண்டெழ வேண்டும். அந்த வல்லமையும் ஆற்றலும் அவர்களுக்கு நிறையவே உண்டு. இறைவனும் இலங்கையர்களோடு துணை நிற்பார்…
– நாகமுத்து பிரதீபராஜா –

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்
75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்