வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் இடம்பெயர்ந்தோர் முகாம்களிலும் வசிக்கும் சமூகங்களின் ஆரோக்கியத்தையும் நலனையும் உறுதிப்படுத்த பொதுச் சுகாதாரத் திணைக்களம்- நடவடிக்கை- கொழும்பு மாநகரசபை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் இடம்பெயர்ந்தோர் முகாம்களிலும் வசிக்கும் சமூகங்களின் ஆரோக்கியத்தையும் நலனையும் உறுதிப்படுத்த பொதுச் சுகாதாரத் திணைக்களம் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. எனகொழும்பு மாநகரசபை தெரிவித்துள்ளது

கொழும்பு மாநகரசபை மேலும் தெரிவித்துள்ளதாவது

சுகாதாரத் திணைக்களத்தின் வெள்ள நிவாரணப் பணிகள் மற்றும் பொதுச் சுகாதார உறுதிப்பாடு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் இடம்பெயர்ந்தோர் முகாம்களிலும் வசிக்கும் சமூகங்களின் ஆரோக்கியத்தையும் நலனையும் உறுதிப்படுத்த பொதுச் சுகாதாரத் திணைக்களம் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. எங்கள் குழுக்கள் பின்வரும் அத்தியாவசிய சேவைகளைச் செய்து வருகின்றன:

உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பரிசோதனைகள்: முகாம்களில் விநியோகிக்கப்படும் மற்றும் தயாரிக்கப்படும் அனைத்து உணவுகளும் உட்கொள்ளப் பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்துதல்.

பாதுகாப்பான குடிநீர் வழங்கல்: நீர் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க பாதுகாப்பான குடிநீரை மதிப்பிட்டு வழங்குதல்.

சூழல் சுகாதாரம் மற்றும் துப்புரவு கண்காணிப்பு: கழிவு முகாமைத்துவம் மற்றும் சாத்தியமான மாசு மூலங்களைக் கட்டுப்படுத்துதல் உட்படச் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தைக் கண்காணித்தல்.

நோய்க்காவிகள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்: கொசுக்களால் பரவும் நோய்களின் பரவலைக் குறைக்கஇ கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள்.

தொற்றுநோய் கண்காணிப்பு: சாத்தியமான நோய்ப் பரவலை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் விரைவான பதிலளிப்பிற்காகக் கண்காணித்தல்.

மருத்துவ உதவி தாய் மற்றும் குழந்தை சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள்: தேவைப்படும் நபர்களுக்கான மருத்துவ உதவிகளை வழங்குதல்.

சுகாதாரக் கல்வி அமர்வுகள்: தனிப்பட்ட சுகாதாரம் துப்புரவு நடைமுறைகள் மற்றும் நோய் தடுப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் சுகாதாரக் கல்வி அமர்வுகள்.

லெப்டோஸ்பைரோசிஸ் தடுப்பு மருந்து விநியோகம்: வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளைப் பின்பற்றி லெப்டோஸ்பைரோசிஸ் நோயைத் தடுப்பதற்காக டாக்ஸிசைக்ளின்  விநியோகித்தல்.

பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாப்பதிலும் அத்தியாவசிய சுகாதாரச் சேவைகள் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வதிலும் திணைக்களம் உறுதியாக உள்ளது. வழங்கப்பட்டுள்ள சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அனைத்து மக்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
Jaishankar
இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவு, புதுடெல்லியின் பரந்த அண்டை நாட்டு ஈடுபாட்டின் ஒருங்கிணைந்த பகுதி-இந்திய வெளிவிவகார அமைச்சர்
rohingya village burning
மியான்மருக்கு எதிரான தீர்ப்பு இனப்படுகொலையை நிரூபிப்பதை சாத்தியமாக்கியுள்ளது
raj somadeva pro
எலும்புக்கூடுகளைத் 'தொற்றுநோய்' என மூடிமறைக்கும் அவலம்: செம்மணி புதைக்குழியும் தமிழர்களின் நீதிக்கான நீண்ட காத்திருப்பும்
gota courts
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல கோட்டாபய விடுத்த கோரிக்கை-- நீதிமன்றம்நிராகரிப்பு!
ESWATINI
இரகசிய ஒப்பந்தம் மூலம் ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி தற்கொலை: பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கையால் சர்ச்சை
dinesh sca
தினேஷ் ஷாப்டர் கொலை: நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும் எவரும் கைது செய்யப்படவில்லை
Gender-violence-parliament
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - நாடாளுமன்றத்தில் ஹரிணி சஜித் செம்மஞ்சள் நிற ஆடைகளில்